
பிட்ச் ரிப்போர்ட்
இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்பதால் முழு பலத்தை காட்ட இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். அதற்கேற்றார் போல கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராஞ்சி மைதானத்தை பொறுத்தவரை டாஸ் வெல்வது முக்கியமான ஒன்றாக பார்கப்படுகிறது. இங்கு பனிப்பொழிவு இருக்கும் என்பதால், 2வதாக பேட்டிங் செய்வது தான் சரியான தேர்வாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோகித் விளக்கம்
இதுகுறித்து பேசிய ரோகித் சர்மா, ராஞ்சி எப்படிபட்ட களம் என்பது நமக்கு தெரியும். பனிப்பொழிவை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினர். நிறைய பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனர். இளம் வீரர்கள் உத்வேகத்துடனும், சீனியர் வீரர்கள் அனுபவத்துடனும் உள்ளதால் ஒரு நம்பிக்கை உள்ளது என ரோகித் சர்மா பேசினார்.

மாற்றங்கள்
இந்த போட்டிக்காக இந்திய அணியில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பேட்டிங்கில் கடந்த போட்டியிலேயே சிறப்பாக இருந்ததால், இந்த முறை பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். அதாவது முதல் டி20 போட்டியில் முகமது சிராஜ் கைவிரலில் காயம் ஏற்பட்டது. எனவே அவருக்கு பதிலாக ஹர்ஷல் பட்டேல் முதல் முறையாக சர்வதேச போட்டியில் அறிமுகமாகவுள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் ஹர்ஷல் பட்டேல் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ப்ளேயிங் 11
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல்


Click it and Unblock the Notifications











