ஒரு யோசனைக்கே இப்படியா?.. நியூசியின் அதிரடியை அடக்க ரோகித் போட்ட சிம்பிள் ப்ளான்.. சுவாரஸ்ய பின்னணி!
ராஞ்சி: அதிரடியுடன் தொடங்கிய நியூசிலாந்து அணியை சிம்பிள் ப்ளான் மூலம் ரோகித் சர்மா சுருட்டியதன் பின்னணி தெரியவந்துள்ளது.
Recommended Video
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது.
முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

பயம் காட்டிய நியூசி,
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் பந்து முதலே அதிரடி காட்டியது. நியூசிலாந்து அணி ஓபனர்கள் மார்டின் கப்தீல், டேரில் மிட்செல் ஆகியோர் தலா 31 ரன்கள் விளாசி அடித்தளம் அமைத்ததால், 11 ஓவர்களில் 90 ரன்களை குவித்திருந்தது. இதனால் எப்படியும் ஸ்கோர் 190+ சென்றுவிடும், அதனை விரட்ட இந்திய அணி சிரமப்படும் என ரசிகர்கள் நகம் கடிக்க தொடங்கினர்.

திருப்புமுனை
எனினும் சாதூர்யமாக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் நியூசிலாந்து பேட்டிங்கை கட்டுக்குள் கொண்டு வந்தார். அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேலை சரியாக கையாண்டதால், நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 20 ஓவர்களில் அந்த அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ஓப்பனர்கள் ரோகித் சர்மா (55) கே.எல்.ராகுல் (65) அரைசதம் விளாச 17.2 ஓவர்களிலேயே வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ரோகித்தின் சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில் நியூசிலாந்தின் அதிரடியை கட்டுக்குள் கொண்டு வந்தது குறித்து ரோகித் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்திய அணி ஒரு குழுவாக சிறப்பாக செயல்பட்டது. மைதானத்தில் தொடக்கம் முதலே பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விளையாட கடினமாக இருந்தது. இதனால் ரன்கள் கசியத் தொடங்கியது. இருப்பினும் எங்கள் பவுலர்கள் சாதூர்யமாக செயல்பட்டனர்.

சிம்பிள் திட்டம்
நியூசிலாந்து அணியின் பேட்டிங் தரம் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஓப்பனிங் மிகவும் வலுவானது. எனவே தான் அதனை எப்படியாவது பிரித்துவிட்டால் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை கொண்டு வரலாம் என நம்பினேன். அதற்காக மைதானத்தில் பவுலர்களிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்திக்கொண்டே இருந்தேன். இறுதியில் நான் நினைத்ததை போலவே ஒரு விக்கெட் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றியது என ரோகித் சர்மா கூறினார். முழு நேர டி20 அணி கேப்டனாக ரோகித் சர்மா வென்றுக்கொடுக்கும் முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications