Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

படுதோல்வியுடன் தொடரை துவக்கிய நியூசி.. எளிதாக வென்ற இந்தியா.. தவான், ஷமி அசத்தல் #IndVNz

Recommended Video

157 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து- வீடியோ

நேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி பந்துவீச்சில் விரைவாக விக்கெட்களை அள்ளியதால் நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டுமே நிலைத்து நின்று, அரைசதம் அடித்தார்.

பந்துவீச்சு திட்டம்

பந்துவீச்சு திட்டம்

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஒருநாள் தொடர் உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி என்றாலும் இந்தியா 2 வேகப் பந்துவீச்சாளர்கள், 2 சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஆல்-ரவுண்டர்கள் என வித்தியாசமான அணியை தேர்வு செய்தது

அணி மாற்றம்

அணி மாற்றம்

தினேஷ் கார்த்திக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டனர். நியூசிலாந்து ஆடுகளங்களில் 300+ ரன்கள் எடுப்பது எளிது, ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்தியா இந்த போட்டிக்கு தயாரானது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, தோனி, கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, விஜய் ஷங்கர், குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், ஷமி

நியூசிலாந்து தடுமாற்றம்

நியூசிலாந்து தடுமாற்றம்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குப்டில் மற்றும் மன்ரோ இருவரும் ஷமி பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறினர். ரோஸ் டெய்லர் 24, டாம் லாதம் 11 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் வெளியேறினர். ஜாதவ் தன் பந்துவீச்சில் ஹென்றி நிக்கோல்ஸ்-ஐ வீழ்த்தினார். ஷமி தன் மூன்றாவது விக்கெட்டாக சான்ட்னர்-ஐ 14 ரன்களில் வீழ்த்தினார். கடைசி நான்கு பேட்ஸ்மேன்களில் மூவர் குல்தீப் சுழலில் வீழ்ந்தனர்.

கேப்டன் அரைசதம்

கேப்டன் அரைசதம்

கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று ஆடி 64 ரன்கள் அடித்தார். 38 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 157 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் ஷமி 3, சாஹல் 2, ஜாதவ் 1, குல்தீப் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

158 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. ரோஹித் 11 ரன்களில் வெளியேற, கோலி, தவான் இணைந்து நிதானமாக ரன் குவித்தனர். இடையே அதிக சூரிய ஒளி பேட்ஸ்மேன் நிற்கும் திசைக்கு நேர் எதிரில் வீசியதால், போட்டி அரைமணி நேரம் தடைபட்டது. இதனால், போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 156 ஆக மாற்றப்பட்டது. கோலி 45 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான், ராயுடு இணைந்து கடைசி வரை நின்று அணியை வெற்றி பெறச் செய்தனர். தவான் 75 ரன்கள் அடித்து தன் பார்மை மீட்டார்.

ஷமி ஆட்டநாயகன்

ஷமி ஆட்டநாயகன்

மூன்று விக்கெட்களை வீழ்த்திய ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஷமி தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் இருவரையும் வெளியேற்றினார். அப்போது துவண்ட நியூசிலாந்து அணி, அதன் பின் மீளவே இல்லை.

Story first published: Wednesday, January 23, 2019, 15:55 [IST]
Other articles published on Jan 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+