Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

India vs Newzealand 1st T20 : பௌலிங்கும் சரியில்லை.. பேட்டிங்கும் சரியில்லை.. இந்தியா படுதோல்வி

வெல்லிங்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் டி20 போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் 80 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

இந்திய அணியில் யார் யார்?

இந்திய அணியில் யார் யார்?

முன்னதாக இந்த போட்டிக்கான இந்திய அணியில் விஜய் ஷங்கர், க்ருனால் பண்டியா, ஹர்திக் பண்டியா என மூன்று ஆல்-ரவுண்டர்களும், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி என மூன்று விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களும் அணியில் இடம் பிடித்தனர். இந்த புதுமையான அணி தேர்வு யுக்தி சரியாக எடுபடவில்லை. முழு போட்டி விவரங்களை காண்போம்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), தவான், ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, சாஹல்.

நியூசிலாந்து அணி விவரம்

நியூசிலாந்து அணி விவரம்

நியூசிலாந்து அணி - செய்ஃபர்ட், மன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), மிட்செல், டெய்லர், கிராண்ட்ஹோம், சான்ட்னர். குக்லேய்ஜன், டிம் சௌதி, இஷ் சோதி, பெர்குசன்.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

இந்தியா டாஸ் வென்று நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. சிறப்பாக பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சை சிதறடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் 14 சிக்ஸர்கள் அடித்தனர். துவக்க வீரர் செய்ஃபர்ட் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அசத்தினார். மன்றோ 34, வில்லியம்சன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

220 ரன்கள் என்ற கடுமையான இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து இந்திய வீரர்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர். மறுபுறம் தேவைப்படும் ரன் ரேட் 15, 20 என எகிறியது. தவான் 29, விஜய் ஷங்கர் 27, தோனி 39, க்ருனால் பண்டியா 20 ஆகியவை மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்த இரட்டை இலக்க ரன்கள். பெரிய இலக்கு என்பதால் இந்தியா சேஸிங் அழுத்தத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர்.

இந்திய பந்து வீச்சு மோசம்

இந்திய பந்து வீச்சு மோசம்

இந்திய அணியின் பந்துவீச்சு மிக சுமாராக இருந்தது. கலீல் அஹ்மது, புவனேஸ்வர் குமார், க்ருனால் பண்டியா, ஹர்திக் பண்டியா, சாஹல், குல்தீப் என அனுபவம், இளமை, சுழல், வேகம் என எப்படி மாறி மாறி பந்து வீசினாலும் நியூசிலாந்து வீரர்கள் துவைத்து எடுத்தனர். சாஹல் மட்டுமே குறைந்த பட்சமாக ஓவருக்கு 8.25 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பீல்டிங்கும் மோசமாகவே இருந்தது. தினேஷ் கார்த்திக் இரண்டு கேட்ச்களையும், தோனி ஒரு கேட்ச்சையும் பிடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டனர்.

Story first published: Wednesday, February 6, 2019, 16:34 [IST]
Other articles published on Feb 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+