Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டெஸ்டில் அஸ்வினுக்கு இடமில்லையா?.. டிராவிட்டிற்கு வந்த இக்கட்டான சூழல்.. பின்னணி என்ன?

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் நீக்கப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3ம் தேதி தொடங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகான வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஓய்வில் இருந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்குகிறார். ஆனால் முக்கிய பிரச்னையே பந்துவீச்சில் தான் உள்ளது. இந்திய அணி கடந்த போட்டியில் 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. அதில் நல்ல வெற்றியும் கிடைத்தது. முதல் டெஸ்டில் ஸ்பின்னர்கள் மட்டும் 19 விக்கெட்களை எடுத்தனர்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் அதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் நீண்ட நாட்களாக போட்டிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதால் பிட்ச்-ல் புற்கள் நன்கு வளர்ந்துள்ளன. அதனை ஓரளவிற்கு மட்டுமே வெட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது. புற்கள் அதிகம் இருந்தால் பந்தில் டேர்னிங் இல்லாமல் சுழற்பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே சோபிக்க வாய்ப்பு இருக்கிறது.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

இதனால் இந்திய அணியும் ஒரே ஒரு ஸ்பின்னர் அல்லது 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி 2 ஸ்பின்னர்களை பயன்படுத்தினால் ஜடேஜா மற்றும் அஸ்வின் விளையாட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஒரு ஸ்பின்னர் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் ஜடேஜாவை பயன்படுத்தவே அதிக வாய்ப்புகள் உள்ளன. முதல் டெஸ்டில் அஸ்வின் 6 விக்கெட்களை சாய்த்தார், பேட்டிங்கில் 2 இன்னிங்ஸ் சேர்த்து 60 விக்கெட்களை சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் அரைசதம் மற்றும் பவுலிங் 5 விக்கெட்கள் என இரண்டிலுமே சிறப்பான ஆட்டத்தை கொடுத்திருந்தார்.

 கோலி கேப்டன்சி

கோலி கேப்டன்சி

அடுத்த போட்டியில் விராட் கோலி களமிறங்குகிறார். அவரின் கேப்டன்சியில் அஸ்வினை விட ஜடேஜாவின் மீதே அதிக முறை நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் ஜடேஜா தற்போது பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே பேட்டிங்கில் உதவுவார் என அவரை சேர்க்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Story first published: Wednesday, December 1, 2021, 18:55 [IST]
Other articles published on Dec 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+