Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்து தொடரில் சேவாக் சாதனைகளை காலி செய்ய காத்திருக்கும் கோலி.. எந்த சாதனைகள் தெரியுமா?

ஆக்லாந்து : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஒருநாள் தொடர் புதன்கிழமை முதல் நடை பெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி கேப்டன் கோலி, சேவாக்கின் இரண்டு சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

சவாலான நியூசிலாந்து தொடர்

சவாலான நியூசிலாந்து தொடர்

மூன்று ஐசிசி சிறந்த வீரருக்கான விருதுகளையும் அள்ளிய கோலி, அடுத்து நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஆடவுள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடர் இந்தியாவுக்கு சவாலான ஒன்றாக இருக்கும்.

அதிக சதங்கள்

அதிக சதங்கள்

இந்த நிலையில், கோலி இந்த தொடரில் சேவாக்கின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பும் உள்ளது. சேவாக் நியூசிலாந்து அணிக்கு எதிராக 6 சதங்கள் அடித்துள்ளார். இதுவே இந்திய வீரர்களில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடித்த அதிக சதங்கள் ஆகும்.

ஐந்து சதங்கள் அடித்த கோலி

ஐந்து சதங்கள் அடித்த கோலி

சச்சின் மற்றும் கோலி ஐந்து சதங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர். தற்போது நியூசிலாந்து தொடரில் கோலி இரண்டு சதங்கள் அடித்தால், சேவாக்கை முந்தி முதல் இடம் பிடிக்கலாம்.

அதிக ரன்கள் அடித்த வீரர்

அதிக ரன்கள் அடித்த வீரர்

அதே போல, நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் சேவாக் வசமே உள்ளது. சேவாக் 1157 ரன்கள் அடித்துள்ளார். கோலி இந்த பட்டியலில் 1154 ரன்கள் அடித்து, 4 ரன்கள் பின்தங்கி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

கோலி முறியடிப்பார்

கோலி முறியடிப்பார்

இந்த சாதனையையும் கோலி முறியடித்து எளிதாக முதல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று சாதனை புரிந்து, அடுத்து நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

வலுவான நியூசிலாந்து

வலுவான நியூசிலாந்து

இந்த தொடர் ஆஸ்திரேலிய தொடர் போல எளிதாக இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி வலுவாக இருப்பதால், இந்திய அணிக்கு இந்த தொடர் சவாலாக இருக்கும்.

Story first published: Tuesday, January 22, 2019, 17:54 [IST]
Other articles published on Jan 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+