For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பண்டியா வந்த பின்னாடி தான் எல்லாம் சரியா இருக்கு!! குஷியில் கேப்டன் கோலி.. விஜய் ஷங்கர் தான் பாவம்

Recommended Video

பாண்டியா நல்லா விளையாடினார்: குஷியில் கேப்டன் கோலி- வீடியோ

மவுன்ட் மௌங்கனி : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்த வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் கோலி, இந்திய அணியில் ஹர்திக் பண்டியாவின் வரவுக்கு பின்னரே அணியில் சமநிலை உருவாகி உள்ளது என கூறி பாராட்டினார்.

ஆல்-ரவுண்டர் இல்லை

ஆல்-ரவுண்டர் இல்லை

இந்திய அணி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்கும் முன் பண்டியா மற்றும் ராகுல் இடை நீக்கம் செய்யப்பட்டனர். பண்டியா அணியில் இடம் பெற முடியாத நிலையில், கேப்டன் கோலி வேறு ஆல்-ரவுண்டர்களை வைத்து சமாளித்து வந்தார்.

பண்டியா சிறப்பான ஆட்டம்

பண்டியா சிறப்பான ஆட்டம்

இந்நிலையில், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டியில் இடை நீக்கத்தில் இருந்து விடுபட்ட பண்டியா களம் இறங்கினார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்கள் வீழ்த்திய பண்டியா, ஒரு அற்புதமான கேட்ச் ஒன்றையும் பிடித்தார்.

அணியின் சமநிலை

அணியின் சமநிலை

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில், கேப்டன் கோலி வெற்றிக்கு பின் பண்டியா அணியில் இருப்பதால் அணியின் சமநிலை சரியாக இருப்பதாக கூறினார். இந்த போட்டியில் பண்டியா சிறப்பாக ஆடினார் எனவும் பாராட்டினார்.

விஜய் ஷங்கர் வாய்ப்பு

விஜய் ஷங்கர் வாய்ப்பு

முதல் இரண்டு போட்டிகளில் பண்டியா இல்லாத நிலையில், விஜய் ஷங்கர் இடம் பெற்றார். அவருக்கு பந்து வீச மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவர் அந்த சந்தர்ப்பங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறினார்.

கேப்டன் திருப்தி

கேப்டன் திருப்தி

இதனால், பண்டியா வருகைக்காக காத்திருந்த கேப்டன் கோலி, தற்போது திருப்தி அடைந்துள்ளார். மேலும், உலகக்கோப்பை அணியில் பண்டியா மிகவும் முக்கிய வீரராக இருப்பார் என ரவி சாஸ்திரி கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 28, 2019, 18:06 [IST]
Other articles published on Jan 28, 2019
English summary
India vs Newzealand : Kohli praises Hardik Pandya as India won the NZ series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+