For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிலாந்து தொடரில் கோலிக்கு ஓய்வு.. பிசிசிஐ அதிரடி முடிவு.. தற்காலிக கேப்டன் யார்?

Recommended Video

நியூசிலாந்து தொடரில் கோலிக்கு ஓய்வு,தற்காலிக கேப்டன் யார்?- வீடியோ

நேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து இடையே நடந்து வரும் ஒருநாள் தொடரில் கோலி கடைசி இரு போட்டிகளில் ஆட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

அதே போல டி20 தொடரிலும் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாக கோலி தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பிசிசிஐ.

கோலி ஓய்வு முடிவு

கோலி ஓய்வு முடிவு

இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடினார். தொடர்ந்து நியூசிலாந்து தொடரில் பங்கேற்று வருகிறார். முதல் போட்டியில் வெல்லும் வரை கோலி இந்த தொடர் முழுவதும் ஆடுவதாகவே இருந்த நிலையில், முதல் போட்டிக்கு பின்னர் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ செய்தி மூலம் தெரிய வந்துள்ளது.

யார் கேப்டன்?

யார் கேப்டன்?

கோலி ஓய்வு பெரும் நிலையில் கடைசி இரு ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது. ஆசிய கோப்பை தொடரில் கோலி, ஓய்வு பெற்ற போது கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

ஏன் பாதியில் முடிவு?

ஏன் பாதியில் முடிவு?

தற்போது நியூசிலாந்து தொடரிலும் ரோஹித் சர்மா கேப்டனாக வெற்றிக் கொடி நாட்டுவார் என்றே எதிர்பார்க்கலாம். எனினும், கோலியின் ஓய்வு முடிவு ஏன் தொடர் துவங்கிய பின் பாதியில் எடுக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக் குறியாக உள்ளது.

மாற்று வீரர் இல்லை

மாற்று வீரர் இல்லை

கோலி ஓய்வு பெரும் நிலையில் அவருக்கு மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே, முக்கிய பந்துவீச்சாளர் பும்ரா நியூசிலாந்து தொடரில் ஆடாத நிலையில், கோலியின் ஓய்வு முடிவு சரி தானா?

பேட்டிங்கில் யார்?

பேட்டிங்கில் யார்?

கோலி ஓய்வு பெற்றால் பேட்டிங்கில் இந்தியா அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரையும் ஆட வைக்க அதிக வாய்ப்புள்ளது. இளம் வீரர் ஷுப்மன் கில்-லும் ஒருநாள் போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, January 24, 2019, 10:11 [IST]
Other articles published on Jan 24, 2019
English summary
India vs Newzealand : Kohli rested for T20 series and last two ODI matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+