Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 ரேங்கிங்.. ரோஹித், குல்தீப் முன்னேற்றம்.. மற்ற இந்திய வீரர்கள் நிலைமை சொல்ற மாதிரி இல்லை!

Recommended Video

டி20 புதிய தரவரிசை பட்டியல் வெளியிடு: வீரர்கள் விவரம்- வீடியோ

துபாய் : ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசையில், சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - நியூசிலாந்து தொடரில் ஆடிய இந்திய வீரர்கள் ஏற்றமும், இறக்கமும் கண்டுள்ளனர்.

குல்தீப் யாதவ் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். எனினும், அதன் மூலம் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

குல்தீப் யாதவ் இரண்டாம் இடம்

குல்தீப் யாதவ் இரண்டாம் இடம்

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியா வீரர் குல்தீப் யாதவ் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தன் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

எத்தனை புள்ளிகள்?

எத்தனை புள்ளிகள்?

ரஷித் கான் 793 புள்ளிகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் குல்தீப் யாதவ் 728 புள்ளிகள் பெற்றுள்ளார். குல்தீப்புக்கு அடுத்து இந்திய அணியில் சாஹல் 17வது இடத்தில் இருக்கிறார்.

இந்திய பந்துவீச்சாளர்கள்

இந்திய பந்துவீச்சாளர்கள்

சாஹல் நியூசிலாந்து தொடரில் சரியாக செயல்படவில்லை. அதனால், ஆறு இடங்கள் இறங்கி இருக்கிறார். புவனேஸ்வர் குமார் தன் 18வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர்கள் தவிர எந்த இந்திய பந்துவீச்சாளரும் முதல் இருபது இடங்களில் இடம் பெறவில்லை.

பேட்ஸ்மேன்கள் தரவரிசை

பேட்ஸ்மேன்கள் தரவரிசை

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா மூன்று இடங்கள் முன்னேறி 7ஆம் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் பங்கேற்காத ராகுல் பத்தாம் இடத்துக்கு பின்தங்கி உள்ளார். தவான் 11வது இடத்தில் தொடர்கிறார்.

நியூசிலாந்து முன்னேற்றம்

நியூசிலாந்து முன்னேற்றம்

நியூசிலாந்து அணியில் சிறப்பாக ஆடிய கோலின் மன்றோ இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இருக்கிறார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 12ஆம் இடம், ராஸ் டெய்லர் 51ஆம் இடம், டிம் செய்ஃபர்ட் 83ஆம் இடம் பிடித்துள்ளனர்.

Story first published: Monday, February 11, 2019, 18:03 [IST]
Other articles published on Feb 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+