Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியின் சர்ச்சை விக்கெட்.. இளம் வீரரின் அபார சதம்.. சுவாரஸ்யமாக முடிந்த முதல் நாள் ஆட்டம்!

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையுடன் நாளை முடித்துள்ளது.

இரு அணிகளும் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் சுமார் 1.30 மணி நேரம் தாமதாக தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பான அடிதளத்தை அமைத்தது.

திடீரென சரிந்த விக்கெட்கள்

திடீரென சரிந்த விக்கெட்கள்

தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். இதனால் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 80 ரன்களாக உயர்ந்தது. ஆனால் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் முட்டுக்கட்டை போட்டார். 71 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 44 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

மீண்டும் சொதப்பிய சீனியர்

மீண்டும் சொதப்பிய சீனியர்

இதன்பின்னர் வந்த சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாரா மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தை கொடுத்தார். 5 பந்துகளை சந்தித்திருந்த போது டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டது. யாராவது ஒருவர் மீட்டே ஆக வேண்டும் என்ற சூழல் இருந்த போது கேப்டன் கோலிக்கு சர்ச்சை முடிவு ஒன்று வழங்கப்பட்டது.

காரணம் என்ன

காரணம் என்ன

அஜாஸ் பட்டேல் வீசிய பந்தில் விராட் கோலி எல்.பி.டபள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டானார். ஆனால் பந்து முதலில் பேட்டில் பட்டதா அல்லது பேடில் பட்டதா என்பதில் 3வது நடுவரே முடிவெடுக்க முடியாமல் இருந்ததால், களநடுவரின் முடிவான அவுட் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி 80 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

Recommended Video

Virat Kohli Wicket-ல் எழுந்த சர்ச்சை.. கடுப்பான ரசிகர்கள்
அபார சதம்

அபார சதம்

ஆனால் மறுமுணையில் தூண் போன்று நிலைத்து நின்று ஆடிய மயங்க் அகர்வால் இந்திய அணியை மீட்டுக்கொண்டு வந்தார். சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், விருதிமான் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Story first published: Friday, December 3, 2021, 19:41 [IST]
Other articles published on Dec 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+