வெயில் அடிச்சா என்ன.. போட்டியை நிறுத்தாம ஆடுங்க! இந்திய – நியூசி. வீரர்களிடம் மேயர் அடாவடி!
Recommended Video

நேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் நகரில் உள்ள மெக்லியன் பார்க்-கில் நடைபெற்றது.
இந்த போட்டி அதிக ஒளியுடன் கூடிய எதிர் வெயில் காரணமாக சிறிது நேரம் தடைப்பட்டது. இதை பற்றி கருத்து தெரிவித்த அந்த நகரின் மேயர், வீரர்கள் இது போன்ற நேரங்களில் வெளியேறாமல் கிரிக்கெட் ஆட வேண்டும் என கூறினார்.

இந்தியா சேஸிங்
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலி பேட்டிங் செய்தது. அந்த அணி 157 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து இந்தியா சேஸிங் செய்தது.

எதிர் வெயில் அடித்தது
உணவு இடை வேளைக்கு பின் எதிர் வெயில் பேட்ஸ்மேன் முகத்திற்கு நேராக அடித்ததால் அம்பயர் பாதுகாப்பு கருதி போட்டியை நிறுத்தி வைத்தனர். அப்போது கோலி, தவான் பேட்டிங் ஆட வந்தனர்.

போட்டி நிறுத்தி வைப்பு
அவர்கள் இது குறித்து புகார் கூறாவிட்டாலும் அம்பயர் விதிகள் காரணமாக போட்டியை 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடர்ந்து நடந்தது.

மேயர் பேச்சு
இதை பற்றி கேட்ட போது அந்த நகரின் மேயர் பில் டால்டன், இவர்கள் எல்லாம் விளையாட்டு வீரர்கள். இது வெளியில் ஆடும் விளையாட்டு. வெயில் கண்ணில் படுவது எல்லாம் விளையாட்டின் ஒரு பகுதி இதை ஏற்றுக் கொண்டு அவர்கள் ஆட வேண்டும் என கூறினார்.

எதிர்ப்பு கூறவில்லை
எதிர் வெயில் பிரச்சனை காரணமாக ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி தடை படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. அம்பயரின் போட்டி நிறுத்த முடிவுக்கு இரு அணி கேப்டன்களும் எதிர்ப்பு கூறவில்லை.

காரணம் என்ன?
இந்த எதிர் வெயில் பிரச்சனை உலகின் எந்த மைதானத்திலும் இல்லாத நிலையில், இந்த மைதானத்தில் மட்டும் வரக் காரணம், இந்த மைதானத்தின் அமைப்பு தான். மற்ற மைதானங்களில் வடக்கு - தெற்கு திசையில் ஆடுகளம் அமைக்கபட்டுள்ள நிலையில், நேப்பியரில் மேற்கு - கிழக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது நியாயமா?
சரியாக மைதானம் அமைக்கப்படவில்லை என்ற தவறை ஒப்புக் கொள்ளாமல் வீரர்கள் ஆடவேண்டும் என அந்த நகரின் மேயர் கூறுவது எந்த வகையில் நியாயம்?


Click it and Unblock the Notifications