Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இர்பான் பதான் சாதனையை முறியடித்த ஷமி.. நியூசி. ஒருநாள் போட்டியில் அதிரடி விக்கெட் வேட்டை

Recommended Video

குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி ஷமி சாதனை- வீடியோ

நேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஷமி தன் நூறாவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை குறைந்த போட்டிகளில் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் செய்துள்ளார் ஷமி.

முஹம்மது ஷமி 2 விக்கெட்கள்

முஹம்மது ஷமி 2 விக்கெட்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பந்துவீசி வருகிறது. முதல் நான்கு ஓவர்களில் இந்திய அணியின் முஹம்மது ஷமி 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

100வது விக்கெட்

100வது விக்கெட்

இந்த இரண்டு விக்கெட்களோடு, ஒருநாள் போட்டிகளில் தன் 100வது விக்கெட்டை எட்டினார் ஷமி. இந்திய அளவில் ஷமி விரைவாக 100 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். மேலும், உலகளவில் 6ஆம் இடம் பிடித்துள்ளார்.

இர்பான் பதான்

இர்பான் பதான்

இதற்கு முன் இந்திய அணியின் இர்பான் பதான் 59 போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்தி குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.

ஷமி முதல் இடம்

ஷமி முதல் இடம்

தற்போது இர்பான் பதானின் சாதனையை முறியடித்துள்ளார் ஷமி. 56 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டை எட்டினார் ஷமி. சமீபத்தில் புவனேஸ்வர் குமார் அதிக போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய வரிசையில் ஐந்தாம் இடம் பிடித்து இருந்தார்.

ஷமியின் முக்கியத்துவம்

ஷமியின் முக்கியத்துவம்

இந்த நேரத்தில் ஷமி விரைவாக 100 விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற சாதனை புரிந்ததை அடுத்து அவரின் முக்கியத்துவம் இந்திய அணியில் உயர்ந்துள்ளது. உலகக்கோப்பை அணிக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஷமி தன் இடத்தை உறுதியாக்கிக் கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.

நியூசிலாந்து தடுமாற்றம்

நியூசிலாந்து தடுமாற்றம்

முதல் ஒருநாள் போட்டியில் ஷமி தன் முதல் ஓவரிலும், இரண்டாவது ஓவரிலும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியதை அடுத்து நியூசிலாந்து அணி ரன் குவிக்க தடுமாறி வருகிறது. அந்த அணி 17 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் இழந்துள்ளது.

Story first published: Wednesday, January 23, 2019, 9:19 [IST]
Other articles published on Jan 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+