Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எல்லாம் போச்சு” ரோகித் எடுத்த முடிவே தவறா.. ரன்மழையால் திடீர் ஷாக் கொடுத்த நியூஸி,- என்ன நடந்தது

ராஞ்சி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் தோற்றாலும் நியூசிலாந்து அணி பக்கா ப்ளானை செயல்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வெளுத்து வாங்கியது.

டாஸ்

டாஸ்

ராஞ்சி மைதானத்தை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்குமே சாதகமாக இருக்கும். எனினும் இங்கு பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்யும். அதற்கேற்றார் போலவே ரோகித் சர்மாவும் பவுலிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்திலேயே விக்கெட்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து வீரர்கள் பெரும் மாற்றம் கொடுத்தனர்.

விளாசி தள்ளிய கப்தில்

விளாசி தள்ளிய கப்தில்

ஆட்டத்தின் முதல் பந்து முதலே தொடக்க வீரர் மார்டின் கப்தில் அதிரடி காட்டினார். முதல் ஓவரை சீனியர் விரர் புவனேஷ்வர் குமார் வீச, 14 ஓவர்கள் வந்தது. இந்த ஓவரின் 4வது பந்தில் தூக்கி அடித்த போது, கே.எல்.ராகுல் கேட்சை தவறவிட்டதால் 2வது உயிரை கப்தில் பெற்றார். அப்போது இருந்து அவரை தடுத்து நிறுத்துவதில் இந்திய வீரர்கள் திணறினர்.

நான் ஸ்டாப் ஆட்டம்

நான் ஸ்டாப் ஆட்டம்

அந்த மிஸ் ஃபீல்டிற்கு பிறகு கியரை மாற்றிய கப்தில் - டேர்லி மிட்செல் ஜோடி இந்திய அணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதன் காரணமாக 4 ஓவர்களில் 42 ரன்களை குவித்தது. இறுதியில் தீபக் சஹார் வீசிய பந்தில் மார்டின் கப்தில் 31 ரன்களுக்கு வெளியேறினார். நியூசிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்ட வேண்டும் என்ற திட்டத்தை சரியாக செயல்படுத்தியது தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் எப்படி இவ்வளவு ரன்கள் வந்தது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் முதல் இன்னிங்ஸிலேயே அதிக அளவில் பொழிய தொடங்கியது. பவுலர்கள் அனைவருமே பந்து கையை விட்டு நழுவி செல்கிறது என துணிகளால் துடைத்துக்கொண்டே இருந்ததை பார்க்க முடிந்தது. 2வது இன்னிங்ஸில் இதனை விட மோசமாக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலும் இந்திய அணியால் விரட்ட முடியும்.

Story first published: Friday, November 19, 2021, 20:14 [IST]
Other articles published on Nov 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+