Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“குறுக்கே வந்த கௌசிக்”.. 2வது டி20 போட்டியின் போது ரசிகர் தந்த ட்விஸ்ட்.. பிசிசிஐ-க்கு வந்த தலைவலி!

ராஞ்சி: 2வது டி20 போட்டியின் போது ரசிகர் ஒருவர் செய்த வினோத விஷயத்தால் பிசிசிஐ-க்கு கடும் நெருக்கடி வந்து சேர்ந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 153/6 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 புள்ளிகளை பெற்று வெற்றி கண்டுள்ளது. முழு நேர டி20 அணி கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்ட முதல் தொடரிலேயே வெற்றி வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இளம் வீரர்களை அதிகளவில் பயன்படுத்தியதற்கும் ரோகித்தின் மீது தனி கவனம் சென்றது.

ரசிகர் கொடுத்த ட்விஸ்ட்

ரசிகர் கொடுத்த ட்விஸ்ட்

இந்நிலையில் 2வது போட்டியின் போது ரோகித்திற்காக ரசிகர் செய்த விஷயம் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து அணி பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது, ரன்ரேட்டை குறைக்க ரோகித் சர்மா அங்கும் இங்கும் பதற்றமாக சுற்றி வந்தார். அப்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவை நோக்கி வேகமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

New Zealand Batting-ஐ கட்டுபடுத்த Rohit Sharma போட்ட திட்டம்
பரபரப்பு சம்பவம்

பரபரப்பு சம்பவம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகுந்த பாதுகாப்புகளுடன் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் தாண்டி ரோகித்திடம் அந்த ரசிகர் சென்றுவிட்டார். ஒரு நல்ல விஷயமாக ரோகித்தை அவர் தொடவில்லை. பயோ பபுளில் இருப்பதை உணர்ந்த அந்த ரசிகர், காலில் மட்டும் விழுந்து வணங்கினார். இவற்றையெல்லாம் சற்றும் எதிர்பாராத ரோகித் சர்மா, ஆச்சரியத்தில் தயவுக்கூர்ந்து எழுந்து சென்றுவிடுங்கள் எனக்கேட்டுக்கொண்டார். இதன்பின்னர் நிலைமை சரியானது.

பிசிசிஐ-க்கு தலைவலி

பிசிசிஐ-க்கு தலைவலி

இந்த சம்பவம் வேடிக்கையாய் அமைந்த போதும், பிசிசிஐ-க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அந்த ரசிகர் ரோகித்தை தொட்டிருந்தால் பெரும் பிரச்னை ஏற்பட்டிருக்கக்கூடும். ஏனென்றால் சிறிய விதிமீறில்கள் கூட பெரும் தொடர்களையே நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு ஐபிஎல் தொடர் கூட சிறு விதிமுறை மீறலால் தான் ஏற்பட்டது. எனவே இனி வரும் நாட்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க பிசிசிஐ தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

Story first published: Saturday, November 20, 2021, 17:37 [IST]
Other articles published on Nov 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+