
இந்தியா - நியூசிலாந்து போட்டி
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிக சூரிய ஒளியால் தடை
அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆட வந்த இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 44 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. தவான் 29, கோலி 2 ரன்கள் அடித்து களத்தில் இருந்த போது போட்டி அதிக சூரிய ஒளியால் தடைபட்டது.

அம்பயர்கள் முடிவு
நேப்பியர் மைதானத்தில் சூரியன் ஒரு புறம் நிற்கும் பேட்ஸ்மேன் கண்களுக்கு நேராக ஒளி வீசும் என்பதால், அது பேட்டிங் செய்ய சிரமத்தை அளிக்கும். இதனால், அம்பயர்கள் போட்டியை நிறுத்தி உள்ளனர். எந்த வீரரும் அதிக சூரிய ஒளி குறித்து புகார் கூறவில்லை என தெரிகிறது.

மைதானம் கட்டப்பட்ட விதம்
நேப்பியர் மைதானத்தில் சமீபத்தில் நடந்த சூப்பர் ஸ்மாஷ் போட்டி ஒன்றும் இதே காரணத்துக்காக தாமதமானது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம், இந்த மைதானம் கட்டப்பட்ட விதம் தான் என கூறப்படுகிறது. விரைவில் அது மாற்றப்படாவிட்டால் இன்னும் சில போட்டிகள் இது போன்ற அசௌகரியங்களை சந்திக்க நேரிடும்.

வித்தியாசமான காரணங்கள்
பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் மழை, பனி, வெளிச்சமின்மை மின்னல் போன்ற காரணங்களால் தடைபடுவது உண்டு. மிகச் சில சந்தர்ப்பங்களில் வித்தியாசமான காரணங்களுக்காக போட்டி தடைபட்டது உண்டு. ஒருமுறை கார் மைதானத்துக்குள் நுழைந்தது, சமைக்கும் இயந்திரம் புகைந்தது போன்றவற்றால் போட்டி தடைப்பட்டதும் உண்டு. அது போல சர்வதேச கிரிக்கெட் போட்டி அதிக சூரிய ஒளியால் தடை பட்டுள்ளது.

மீண்டும் போட்டி துவக்கம்
அப்டேட் : சூரிய ஒளியால் தடைபட்ட போட்டி மீண்டும் துவங்கியது. சிறிய மாற்றமாக போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 156 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,


Click it and Unblock the Notifications