Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மனைவிக்காகவா இப்படி ஒரு மாற்றம்”.. சூர்யகுமார் அதிரடிக்கு பின்னர் இருந்த நெருக்கடி.. சுவாரஸ்ய தகவல்

ஜெய்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், தனது அதிரடிக்கு பின்னர் மறைந்திருந்த சுவாரஸ்ய காரணத்தை உடைத்துள்ளார்.

Recommended Video

Why Suryakumar Yadav to be No.3 Batter? | IND vs NZ | OneIndia Tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 164/6 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 166/ 5 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

 அதிரடி காட்டிய சூர்யகுமார்

அதிரடி காட்டிய சூர்யகுமார்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். நியூசிலாந்து அணி நிர்ணயித்த சவாலான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஓப்பனிங் ஜோடி அதிர்ச்சி கொடுத்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 15 ரன்களுக்கு நடையை கட்டினார். டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்றதை போன்றே மீண்டும் நடைபெறுமா என ரசிகர்கள் நகத்தை கடிக்க தொடங்கினார்.

 சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

ஆனால் அனைத்தையும் மாற்றி அமைத்தார் சூர்யகுமார் யாதவ். தனி ஆளாக நின்ற அவர், 40 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் விளாசினார். அவருக்கு துணை நின்ற ரோகித் சர்மா 48 ரன்கள் சேர்க்க, 19.4 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தொடரிலும் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி

சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி

இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ், சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 3 - 4 வருடங்களாக நான் கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டு வருகிறேனோ, அதனையே தான் இந்த போட்டியிலும் தவறின்றி செய்தேன். பேட்டிங்கில் வேற எந்த மாற்றத்தையும் நான் செயல்படுத்தவில்லை. வலைப்பயிற்சியின் போது நானே எனது தவறுகளை கண்டறிந்து மாற்றிக்கொள்ள கடும் முயற்றி எடுத்தேன்.

இந்த போட்டியிலும் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு இருந்ததால் பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது. மேலும் பந்து சற்று மெதுவாக வந்ததால் சிறப்பாக விளையாட முடிந்தது.

மனைவி பிறந்தநாள்

மனைவி பிறந்தநாள்

தொடர்ந்து பேசிய அவர், இன்று எனது மனைவியின் பிறந்த தினமாகும். சரியாக இதே நாளில் நான் சிறப்பாக விளையாடியதும், ஆட்ட நாயகன் விருது பெற்றதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டம், எனது மனைவிக்கு தரும் பிறந்தநாள் பரிசு எனக்கூறினார். சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்திருந்த போது ட்ரெண்ட் போல்ட் கேட்ச்சை விட்டார். இதுகுறித்து பேசிய அவர், போல்ட்-க்கும் இதனை ஒரு பரிசாகவே தந்ததாக நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, November 18, 2021, 20:20 [IST]
Other articles published on Nov 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+