Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமி, ரோஹித், கோலி சூப்பர் ஆட்டம்.. இந்தியா அசத்தல் வெற்றி.. தொடரை இழந்த நியூசிலாந்து

மவுன்ட் மௌங்கனி : நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங்

தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங்

முன்னதாக மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டது. தசைப்பிடிப்பில் இருந்த தோனி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய உள்ளார்.

விஜய் ஷங்கர் இல்லை

விஜய் ஷங்கர் இல்லை

அதே போல இடை நீக்கத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பண்டியா அணியில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட விஜய் ஷங்கர் தன் வாய்ப்பை இழந்தார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், முஹம்மது ஷமி

நியூசிலாந்து அணி மாற்றம்

நியூசிலாந்து அணி மாற்றம்

வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் இஷ் சோதி மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு களமிறங்கியது.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி துவக்கத்தில் இந்திய பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் திணறியது. ராஸ் டெய்லர் 93, டாம் லாதம் 51 ரன்கள் அடித்து அணியின் ரன்களை ஓரளவு உயர்த்தினர். நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 243 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா அசத்தல் வெற்றி

இந்தியா அசத்தல் வெற்றி

244 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தவான் 28 ரன்களில் வெளியேறினார். எனினும், அடுத்து கோலி, ரோஹித் இணைந்து அரைசதம் அடித்தனர். ரோஹித் 62, கோலி 60 ரன்களில் வெளியேற அடுத்து அம்பதி ராயுடு 40, தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

மூன்று போட்டிகளில் வென்ற இந்தியா 2009ஆம் ஆண்டிற்குப் பின் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதித்துள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இந்திய அணி புதிய வீரர்களை களம் இறக்க வாய்ப்புள்ளது.

Story first published: Monday, January 28, 2019, 16:08 [IST]
Other articles published on Jan 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+