Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறுப்பான பேட்ஸ்மேன்! நல்ல பெயர் வாங்கிய விஜய் ஷங்கர்.. அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா?

Recommended Video

பொறுப்பான பேட்ஸ்மேன்!.. நல்ல பெயர் வாங்கிய விஜய் ஷங்கர்- வீடியோ

ஹாமில்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் சேஸிங்கில் விஜய் ஷங்கர் அருமையாக பேட்டிங் செய்து அசர வைத்தார்.

3வது டி20 போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்தியா - நியூசிலாந்து இரு அணிகளும் பரபரப்பாக இந்த போட்டிக்கு தயாராகின.

விஜய் ஷங்கர் வாய்ப்பு பெற்றார்

விஜய் ஷங்கர் வாய்ப்பு பெற்றார்

விஜய் ஷங்கர் முதல் இரண்டு போட்டிகளை தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு பெற்றார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி 212 ரன்கள் குவித்தது.

தவான் விரைவில் அவுட்

தவான் விரைவில் அவுட்

இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் துவக்க வீரர் தவான் 5 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார் விஜய் ஷங்கர்.

பொறுப்பாக ஆடினார் விஜய்

பொறுப்பாக ஆடினார் விஜய்

பொறுப்பாக ஆடிய அவர் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதில் 5 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடங்கும். உலகக்கோப்பை அணியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற பேச்சு இருக்கும் நிலையில், தன் திறமையை வெளிக்காட்டும் வகையில் கஷ்டமான சேஸிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தொடரில் தோல்வி

தொடரில் தோல்வி

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தாலும், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என இழந்தது.

Story first published: Sunday, February 10, 2019, 17:15 [IST]
Other articles published on Feb 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+