For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2௦19 உலகக்கோப்பையில் அணியில் இடம் பெறப் போவது யார்? விஜய் ஷங்கரா? ஹர்திக் பண்டியாவா?

ஆக்லாந்து : இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாகவே இரு அணிகளும் எடுத்துக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் இந்த தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளது அவரை நேரடியாக உலகக்கோப்பை அணியில் இடம் பெறச் செய்யுமா?

நிரந்தர வாய்ப்பா?

நிரந்தர வாய்ப்பா?

இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக ஹர்திக் பண்டியா இருந்தார். தற்போது இடை நீக்கத்தால் பண்டியா நீக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் ஷங்கர் அந்த இடத்தை தற்காலிகமாக நிரப்பி உள்ளார். ஆனால், இது நிரந்தரமாகுமா? என்ற கேள்விக்கு இப்போதைக்கு விடையில்லை.

பண்டியா புரியாத புதிர்

பண்டியா புரியாத புதிர்

ஹர்திக் பண்டியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இடை நீக்கம் செய்யப்பட்டு, அணியில் தன் இடத்தை இழந்துள்ளார். அவர் எப்போது மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.

தற்காலிக வாய்ப்பு

தற்காலிக வாய்ப்பு

ஒருநாள் அணியில் நிச்சயம் ஒரு ஆல்-ரவுண்டர் வேகப் பந்துவீச்சாளர் தேவை என்ற நிலையில் தற்காலிகமாக விஜய் ஷங்கருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தன் ஒருநாள் போட்டி அறிமுகத்தை பெற்றார்.

விஜய் ஷங்கருக்கு அதிர்ஷ்டம்

விஜய் ஷங்கருக்கு அதிர்ஷ்டம்

2019 உலகக்கோப்பை வரும் மே மாதம் துவங்க உள்ள நிலையில், இந்திய ஒருநாள் அணியில் அதிரடி அறிமுகம் பெற்ற விஜய் ஷங்கருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்திய அணியில் வேறு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் இல்லை என்ற காரணத்தால் அணியில் இடம் பெற்றுள்ள விஜய் ஷங்கர் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என்ற இடத்தை நிரப்பினால், அவரது இடம் நிரந்தரம் ஆக அதிக வாய்ப்புள்ளது.

மூன்றாவது பந்துவீச்சாளர்

மூன்றாவது பந்துவீச்சாளர்

இந்திய அணியில் தற்போது மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக அணியில் இடம் பெற்ற சிராஜ், கலீல் ஆகியோர் அதிக ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்துள்ளனர். அதே சமயம், பேட்டிங்கில் அவர்கள் கை கொடுக்க மாட்டார்கள். இதனால், மித வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பண்டியா மீண்டும் அணிக்கு திரும்பினால் விஜய் ஷங்கருக்கு இடம் கிடைப்பது கடினமே.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

இதை சமாளிக்க ஒரே வழி, நியூசிலாந்து தொடரில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் விஜய் ஷங்கர் அனைவரையும் மிரள வைக்க வேண்டும். பந்துவீச்சு வாய்ப்பு கிடைத்தால் விக்கெட்களை விரைவாக எடுக்க வேண்டும். கூடுதல் ரன்கள் கொடுக்காமல் இருக்க வேண்டும். அதே போல பேட்டிங் வாய்ப்புகள் பெற்றால், அதிலும் தன் முத்திரையை பதிக்க வேண்டும்.

கடைசி வாய்ப்பு ஐபிஎல்

கடைசி வாய்ப்பு ஐபிஎல்

கடைசியாக, ஐபிஎல் தொடரிலும் அட்டகாசம் செய்தால், உலகக்கோப்பை அணியில் விஜய் ஷங்கர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், நியூசிலாந்து தொடரின் இடையே பண்டியா அணியில் இடம் பெற்றால், விஜய் ஷங்கரின் உலகக்கோப்பை கனவு நிறைவேறுவது மிகவும் சிரமம். பண்டியா மீண்டும் அணியில் இடம் பெறுவாரா?

Story first published: Tuesday, January 22, 2019, 18:32 [IST]
Other articles published on Jan 22, 2019
English summary
India vs Newzealand : Vijay Shankar get chance because of Hardik Pandya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+