Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆமா ரிஷப் பண்ட்டுக்கு ஏன் வாய்ப்பு இல்லை? மொக்கை கேள்வி கேட்டு நெத்தியடி வாங்கிய முன்னாள் வீரர்

லண்டன் : இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான், இந்திய அணியில் ஏன் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை என கேள்வி கேட்டு, சரியான பதிலடி பெற்றார்.

ட்விட்டர் தளத்தில் மைக்கேல் வான் மிக அதிகளவில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் போட்டிகள் குறித்த பரபரப்பான பதிவுகளை போட்டு வருகிறார்.

ரிஷப் பண்ட் குறித்து கேள்வி

ரிஷப் பண்ட் குறித்து கேள்வி

அந்த வரிசையில், தற்போது நியூசிலாந்து தொடரிலும், இதற்கு முன் ஆஸ்திரேலிய தொடரிலும் ஒருநாள் அணியில் இடம் பெறாத இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து கேள்வி எழுப்பினார் மைக்கேல் வான்.

ஏன் வாய்ப்பு இல்லை?

ஏன் வாய்ப்பு இல்லை?

தன் பதிவில், "ரிஷப் பண்ட் ஏன் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு பெறுவதில்லை?" என ஒரு கேள்வி கேட்டார். இதற்கு ஒருவர் நெத்தியடி பதில் கொடுத்து வாயடைக்க வைத்துள்ளார்.

சரியான பதிலடி

சரியான பதிலடி

அந்த நபர் தன் பதிலில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பிடிக்காததன் காரணத்தை இப்படி கூறியுள்ளார். "உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் அவரை அணியில் சேரவிடவில்லை" என கூறி உள்ளார். அதாவது, நிகரற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தோனி அணியில் இருப்பதால், ரிஷப் பண்ட் வாய்ப்பு பெறவில்லை என்பதை கூறியுள்ளார்.

பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்

பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்

தோனியால் தான் ரிஷப் பண்ட் அணியில் வாய்ப்பு பெறவில்லை என்பது உண்மை தான் என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக மட்டும் வாய்ப்பு பெற்றார். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Story first published: Friday, February 1, 2019, 18:50 [IST]
Other articles published on Feb 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+