Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்குள் மீண்டும் வரும் தோனி.. 2வது டி20-ல் பங்கேற்க திடீர் ட்விஸ்ட்.. காரணம் என்ன?

அமீரகம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணிக்காக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோதவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி, இந்த தொடர் மூலம் பழிவாங்க திட்டமிட்டு வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. ஜெய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 164/6 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 5/ 166 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 48 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும் விளாசினர். இதன்மூலம் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

தொடரை கைப்பற்றிய

தொடரை கைப்பற்றிய

இரு அணிகளும் மோதும் போட்டி நாளை மாலை ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ன் சொந்த ஊரான இங்கு அதிரடிக்கு பஞ்சம் இருக்காது எனத்தெரிகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிவிட்டால் 3 டி20 போட்டிகள் கொண்ட டொடரில் 2 வெற்றிகளுடன் இந்திய அணி கைப்பற்றும்.

கூடுதல் பலம்

கூடுதல் பலம்

இந்நிலையில் இந்திய அணியினருக்கு கூடுதல் பலமாக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பங்கேற்கவுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த தோனி, தற்போது ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். ஆனால் இன்று திடீரென ஜே.எஸ்.சி. ஏ மைதானத்தில் வருகைப்புரிந்தார். அங்கு இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியினரை சந்தித்தார். மேலும் அங்குள்ள டென்னிஸ், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களுக்கு சென்று வந்தார்.

இந்திய அணி பலம்

இந்திய அணி பலம்

இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள 2வது டி20 போட்டியிலும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த தோனி கலந்துக்கொள்வார் என எதிர்பார்கப்படுகிறது. இதே போல இளம் வீரரான ரிஷ பண்ட்,

தோனி பங்கேற்ப

தோனி பங்கேற்ப

நாளை தனது சொந்த ஊரில் நடைபெறும் தனது திறமையை நிரூபித்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. தோனி இருந்தால், அந்து இன்னும் எளிதாக இருந்திருக்கும் எனக்கூறப்படுகிறது.

Story first published: Thursday, November 18, 2021, 20:22 [IST]
Other articles published on Nov 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+