For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ : பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. பௌலிங்கும் சுமார்.. நியூசிலாந்து அசத்தல் வெற்றி!

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் படு சுமாராக ஆடியது.

பேட்டிங்கில் மிக மோசமாக ஆடிய இந்திய வீரர்கள், பந்துவீச்சில் சுழற்சி முறையில் செயல்பட்டு, நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

India vs Newzealand World cup 2019 warm up match Live score update

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்படவில்லை. அதே போல, கேதார் ஜாதவ்வும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் டாம் லாதம் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில், டாம் ப்ளன்டேல் விக்கெட் கீப்பிங் செய்தார்.

India vs Newzealand World cup 2019 warm up match Live score update

பேட்டிங்கில் இந்திய அணியின் துவக்கம் படுமோசமாக அமைந்தது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆளுக்கு 2 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினர். நான்காம் வரிசையில் பேட்டிங் இறங்கிய ராகுல் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மூவரும் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 5.3 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் இழந்து இருந்தது.

India vs Newzealand World cup 2019 warm up match Live score update

பின்னர் விராட் கோலி 18 ரன்கள் எடுத்து இருந்த போது, கோலின் டி கிராண்ட்ஹோம் பந்தில் பௌல்டு அவுட் முறையில் ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சியைக் கூட்டினார். பின்னர், தோனி - ஹர்திக் பண்டியா விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்த நிதானம் காட்டினர்.

India vs Newzealand World cup 2019 warm up match Live score update

ஹர்திக் பண்டியா 30 ரன்கள் அடித்து சிறிது ஆறுதல் அளித்தார். பின் தினேஷ் கார்த்திக் 4, தோனி 17 ரன்களில் வெளியேற இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

எனினும், ஜடேஜா நிலைத்து நின்று ஆடினார். புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் உள்ளிட்ட பின்வரிசை வீரர்களுடன் இணைந்து, அணியை மீட்டார். அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக குல்தீப் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

India vs Newzealand World cup 2019 warm up match Live score update

இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.

பேட்டிங்கில் மற்ற வீரர்கள் கைவிட்டாலும், பந்துவீச்சில் பும்ரா ஏதாவது செய்வார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் கோலின் மன்றோவை 4 ரன்களில் வெளியே அனுப்பினார். மேலும், தான் வீசிய முதல் 4 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்கள் வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து மிரட்டினார்.

India vs Newzealand World cup 2019 warm up match Live score update

அடுத்து ஹர்திக் பண்டியா பந்துவீச்சில் குப்டில் 22 ரங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இவர்கள் விக்கெட்டை வீழ்த்தும் முயற்சிக்கு பதிலாக, கேப்டன் கோலி, அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் பந்துவீசும் வாய்ப்பு தந்தார். இதனால், எளிதாக ரன் குவித்த கேன் வில்லியம்சன் 67, ராஸ் டெய்லர் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

India vs Newzealand World cup 2019 warm up match Live score update

ஹென்றி நிக்கோல்ஸ் 15 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா, சாஹல், ஹர்திக் பண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பயிற்சிப் போட்டி என்பதால், பந்துவீச்சை "பயிற்சியாகவே" எடுத்துக் கொண்டது என்றாலும், பேட்டிங்கில் இந்தியா சொதப்பியதை நியாயப்படுத்த முடியாது என்பதே உண்மை.

Story first published: Saturday, May 25, 2019, 23:46 [IST]
Other articles published on May 25, 2019
English summary
India vs Newzealand World cup 2019 warm up match Live score update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+