Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆல்ரவுண்டர்களை நம்பி.. 8 ஓவரில் 123 ரன்களை விட்டுக்கொடுத்த 3 பேர்.. இந்திய தோல்விக்கு காரணமே இதுதான்

அக்லாண்ட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ஆல்ரவுண்டர்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் நமன் திர் ஆகியோர் இணைந்து வீசிய 8 ஓவரில் மட்டும் 123 ரன்கள் விளாசப்பட்டது இந்திய அணியின் தோல்வியின் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்களை விளாசியது. நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 107 ரன்களையும், பிரேஸ்வெல் 65 ரன்களையும் விளாசினர்.

India vs NZ

இந்திய அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் எந்த பேட்ஸ்மேனும் பொறுப்புடன் விளையாடவில்லை. இந்திய அணியின் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் ஒரு காரணம் என்றாலும், ஆல்ரவுண்டர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.

ஏனென்றால் பவுலிங்கில் அக்சர் படேல் 3 ஓவர்களை வீசி 43 ரன்களையும், நமன் திர் 1 ஓவரில் 16 ரன்களையும், நிதிஷ் குமார் ரெட்டி 4 ஓவர்களில் 64 ரன்களையும் விட்டுக் கொடுத்துள்ளனர். அதாவது ஆல்ரவுண்டர்கள் வீசிய 8 ஓவர்களில் மொத்தமாக 123 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

பவர் பிளேவிலேயே விரைவாக விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கி இருந்த சூழலில், அட்டாக் செய்கிறேன் என்று நிதிஷ் குமார் ரெட்டி எடுத்த முயற்சிகள் கொஞ்சம் கூட பலனளிக்கவில்லை. அதேபோல் நிதிஷ் குமார் ரெட்டி வேகத்தை குறைப்பது நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு வசமாக அமைந்தது.

இதனால் அடுத்தப் போட்டியில் ஒரு ஆல்ரவுண்டரை பெஞ்ச் செய்துவிட்டு கூடுதலாக ஒரு பவுலரை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். நிதிஷ் குமார் ரெட்டியை நம்பி 4வது வேகப்பந்துவீச்சாளராக எடுத்து சென்றாலும், அவருக்கு முழு ஓவர்களை கொடுக்க கூடாது என்றும் பார்க்கப்படுகிறது. அடுத்தப் போட்டியிலும் இதனை சரி செய்யவில்லை என்றாலும், இந்திய அணியை வீழ்த்த எதிரணிகளுக்கு ஒரு டெம்ப்ளேட் கிடைத்துவிடும்.

Story first published: Friday, October 30, 2026, 18:20 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+