
மழை
மெல்போர்ன் சுற்றி உள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் 23ஆம் தேதி அன்று மெல்போர்னில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

டிரெண்ட் பவுல்ட்
இந்த நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.ஷாகின் ஆப்ரிடி போன்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஏதுவாக, இன்று ரோகித் சர்மா உள்ளிட்டோர் டிரெண்ட் பவுல்ட் பந்துவீச்சை எதிர்கொண்டு தங்களை தயார்ப்படுத்தி கொள்வார்கள் என கணிக்கப்பட்டது.

பிளானில் விளையாடிய மழை
இதே போன்று சுழற்பந்துவீச்சாளர் யார், ரிஷப் பண்ட்க்கு எந்த இடம் தரலாம் என்பது குறித்து முடிவு எடுக்க இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் அனைத்து பிளானிலும் மழை வந்து விளையாடி விட்டது. இதே போன்று நியூசிலாந்தும் முதல் பயிற்சி ஆட்டத்தில் 98 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஆட்டம் கைவிடப்பட்டது
இதனால் தங்களது தவறை திருத்தி கொண்டு இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்று உத்வேகத்துடன் உலககோப்பை சூப்பர் 12 சுற்றை எதிர்கொள்ள இருந்த நியூசிலாந்துக்கும் மழை பின்னடைவை தந்துள்ளது. 5 ஓவர்களாக போட்டி நடைபெற இந்திய நேரப்படி கட் ஆப் மாலை 4.16 மணியாகும். ஆனால் ஆடுகளம் ஈரத்துடன் இருந்தால், அது வீரர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதால் ஆட்டம் கைவிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











