தமிழன் நம்பர் 1 இடத்தை பிடித்தது பொறுக்கலையா? வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் கண்டனம்
அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்தது. அதில் இந்தியாவின் நட்சத்திர வீரரான பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டிருந்தார்.
இதே போன்று இந்திய அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் கடந்து இரண்டு போட்டிகளாக விளையாடிய நிலையில் இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக கூடுதலாக வேகப்பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தான் சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பவுலர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்தார். இதன் மூலம் பும்ரா, ரவி பிஸ்னாய் ஆகியோருக்கு பிறகு இந்த பெருமையை பெற்ற மூன்றாவது இந்தியர் இந்த சாதனையை படைத்தார்.
முதல் தமிழர் போன்ற பெயரும் வருண் சக்கரவர்த்திக்கு கிடைத்தது. இந்த நிலையில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் வருண் சக்கரவர்த்தியை கௌதம் கம்பீர் வெளியே உட்கார வைத்து விட்டார்.
இதற்கு தமிழக ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழர் ஒருவர் நம்பர் ஒன் வீரர் என்ற பெயரை பெற்றதும் கம்பிருக்கு பிடிக்கவில்லையா? உடனே ஏன் அவருக்கு அணியில் இடம் தரப்படவில்லை என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
வருண் சக்கரவர்த்தி இன்னும் தனது மேஜிக் பந்துவீச்சை இந்த தொடரில் காட்டவில்லை என்றும் அவருக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இல்லையென்றால் சிவம் துபாய் நீக்கிவிட்டு கூடுதலாக ஆர்ஸ்தீப் சிங்கை சேர்த்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications