For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Asia Cup: ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் தலையில் அடி.. பாகிஸ்தான் போட்டிக்கு முன் பின்னடைவு

அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரில், சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான செய்தி இந்திய ரசிகர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான அக்சர் படேல் ஓமன் அணிக்கு எதிரான போட்டியின்போது தலையில் காயம் அடைந்துள்ளார்.

இதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. இது இந்திய அணியின் திட்டங்களிலும் பின்னடைவை ஏற்படுத்தும். அபுதாபியில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியின்போது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது.

India vs Oman Major Setback for Team India as Axar Patel Injured

ஓமன் அணியின் இன்னிங்ஸின் 15வது ஓவரில், ஹம்மத் மிர்சா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க மிட்-ஆஃப் பகுதியிலிருந்து ஓடிவந்த அக்சர் படேல், தடுமாறியதால் பந்தை நழுவ விட்டார். நிலைதடுமாறிய அவர், தனது தலையை நேரடியாகத் தரையில் மோதினார். வலியால் துடித்த அவர், தனது தலையையும் கழுத்துப் பகுதியையும் பிடித்துக்கொண்டார். உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் விரைந்து வந்து, அவரை மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றார். அதன் பிறகு, அவர் பீல்டிங் செய்ய மீண்டும் களத்திற்குத் திரும்பவில்லை. இது காயத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்தது.

இந்த போட்டியில் அக்சர் படேல் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசி நான்கு ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். பேட்டிங்கில், ஐந்தாவது வீரராகக் களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர், வெறும் 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். இதில் சஞ்சு சாம்சன்-உடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அணிக்கு முக்கியப் பங்காற்றி வரும் அக்சரின் காயம், சரியான நேரத்தில் இந்திய அணிக்கு விழுந்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், "அக்சர் படேல் நலமாக இருக்கிறார்" என்று தெரிவித்திருந்தாலும், அடுத்த போட்டிக்கு மிகக் குறைவான நேரமே இருப்பதுதான் பெரும் சவாலாக உள்ளது. ஓமன் போட்டி முடிந்து 48 மணி நேரத்திற்குள் இந்திய அணி, துபாயில் பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த குறுகிய கால இடைவெளியில் அக்சர் முழு உடற்தகுதியை எட்டுவது கடினம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் விளையாட முடியாமல் போனால், இந்திய அணியின் பேட்டிங் - பவுலிங் சமநிலை பெரிதும் பாதிக்கப்படும். இதுவரை துபாயில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. அக்சர் விலகும் பட்சத்தில், இந்த வியூகத்தை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும்.

ஓமன் போட்டிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் உள்ளனர். அக்சருக்குப் பதிலாக மாற்று வீரரை வெளியிலிருந்து அவசரமாக அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. காத்திருப்புப் பட்டியலில் (standby list) அக்சரைப் போன்றே ஆல்-ரவுண்டர் திறமை கொண்ட வீரர்களான ரியான் பராக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர். தேவைப்பட்டால், இவர்களில் ஒருவர் உடனடியாக அணிக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, September 20, 2025, 8:17 [IST]
Other articles published on Sep 20, 2025
English summary
India vs Oman: Major Setback for Team India as Axar Patel Injured ahead of Pakistan match in Super 4.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+