Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பங்காளி நாங்களும் வந்துட்டோம்…. அரை இறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா

குயின்ஸ்லாந்து: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால் இறுதியில் 131 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை இந்தியா வென்றது. வரும், 30ம் தேதி நடக்கும் அரை இறுதியில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.

நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதியது.

India vs Pak in U19 WC


நான்காவது முறையாக கோப்பையை தட்டிச் செல்ல தயாராக உள்ள ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய அணி, 265 ரன்கள் எடுத்தது. ஷப்னம் கில் 86 ரன்களும், அபிஷேக் சர்மா 50 ரன்களும் விளாசினர்.

அடுத்து ஆடிய வங்கதேசம் அணி, 42.1 ஓவர்களில் 134 ரன்களுக்கு சுருண்டது. கமலேஷ் நாகர்கோடி 18 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம், 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

அதையடுத்து அரை இறுதிக்கு இந்தியா முன்னேறியது. வரும் 30 ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது. மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோத உள்ளன.

Story first published: Friday, January 26, 2018, 11:06 [IST]
Other articles published on Jan 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+