Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: கத்துக்குட்டி அணியை விட பாகிஸ்தான் மோசம்.. இந்தியா தந்தது செம அடி.. சேவாக் கிண்டல்

கொழும்பு: டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய விதம், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த ஆட்டத்தில், இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றதையடுத்து அவர் இவ்வாறு சாடியுள்ளார். இதே போன்று 77 ரன்கள் குவித்து அசத்திய இஷன் கிஷனையும் சேவாக் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இஷன் கிஷன் ஒரு உண்மையான 'துரந்தர்' (சாமர்த்தியசாலி) போல விளையாடினார். 17 ஆம் நூற்றாண்டு அணுகுமுறை காரணமாக, பாகிஸ்தான் இந்தியாவால் எளிதில் வெல்லக்கூடிய அணியாகத் தோன்றியது. அவர்கள் வழக்கம் போல சரியான அடி வாங்கியுள்ளார்கள்.இருக்கும் கத்துக்குட்டி அணிகளிலேயே பாகிஸ்தான் தான் எளிதில் வீழ்த்த கூடிய அணியாக திகழ்ந்தது" என்று கிண்டல் செய்துள்ளார்.

இதற்கிடையே, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக், இந்தியா-பாகிஸ்தான் இடையே இனி 'கிரிக்கெட் போட்டிக்குரிய போட்டித்தன்மை இல்லை என்று கருத்து தெரிவித்தார். இரு அணிகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால், ஆட்டங்களின் ஒருதலைப்பட்சமான முடிவதாபக அவர் கூறினார். இதற்குக் காரணம். 2026 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.

2022 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், டி20 உலகக் கோப்பையில் 2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒன்பது ஆட்டங்களில் இந்திய அணி எட்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது குறித்து பேசிய அவர், "வரலாற்று ரீதியாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவிலும் போட்டி இருக்கலாம், ஆனால் இது ஒரு கிரிக்கெட் போட்டி அல்ல. இங்கு எந்த ஒப்பீடும் இல்லை. பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையைப் பார்த்தால், பயப்படுவதற்கு யார் இருக்கிறார்கள்?"

"பொதுவாக டி20 போட்டிகளில் பந்துவீச்சை விட பேட்ஸ்மேன்களுக்கே அதிகம் பயப்படுவோம். ஆனால் பாகிஸ்தானில் சாகிப்சாதா ஃபர்ஹானுக்குப் பிறகு யாரும் இல்லை; அவரும் ஒரே மாதிரி விளையாடுவதும் இல்லை. எதிரணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வீரர்கள் யாரும் இல்லை. பிஎஸ்எல் ஒரு நல்ல தொடர் என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அதிலிருந்து வீரர்கள் உருவாகிறார்களா? ஏனென்றால் ஐபிஎல் எப்போதும் வீரர்களை உருவாக்குகிறது." என்று முரளி கார்த்திக் கூறியுள்ளார்.

Story first published: Monday, February 16, 2026, 7:15 [IST]
Other articles published on Feb 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+