Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் தங்கப் பதக்கப் போட்டி.. ஆசிய விளையாட்டின் மெகா பைனல்.. எங்கே, எப்போது?

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தங்கப் பதக்க இறுதிப்போட்டி உறுதியாகியுள்ளது. அரையிறுதிப் போட்டிகளில் இந்தியா இலங்கையையும், பாகிஸ்தான் வங்கதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

India vs Pakistan Asian Games 2026 Cricket Final Schedule Path to Final and Complete Details

மழையால் பாதிக்கப்பட்ட காலிறுதி முதல் அரையிறுதி வெற்றி வரை இரு அணிகளும் இறுதிப்போட்டியை எட்டிய பயணம் மற்றும் இறுதிப்போட்டி குறித்த முழு விவரம் இதோ:

சர்வதேச டி20 தரவரிசையின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 முன்னணி அணிகளும் தொடக்க லீக் சுற்றுகளில் ஆடாமல் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. அடுத்து ஜப்பானின் நகோயா மற்றும் நிஷின் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக 4 காலிறுதி ஆட்டங்களும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தாகின.

ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் விதிகளின்படி நாக்-அவுட் ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டால், சிறந்த ஐசிசி டி20 தரவரிசை கொண்ட அணிகளே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு முன்னேறும்.

அந்த விதியின்படி, உலகளவில் முதல் இடத்தில் உள்ள இந்தியா, ஆப்கானிஸ்தானை (10வது இடம்) வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது. 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், ஹாங்காங் அணியை (24வது இடம்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் இதே விதியால் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் தனி ஆளாக நின்று 46 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் நின்றார். வைபவ் சூர்யவன்ஷி 38 ரன்கள் எடுத்தார்.

170 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையாக வெளியே அனுப்பினர். ஜஸ்பிரித் பும்ரா 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களும், அக்‌சர் படேல் 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களும், அபிஷேக் சர்மா 2 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அவர்களின் பந்துவீச்சால் இலங்கை அணி வெறும் 45 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை அணியில் 6 பேட்டர்கள் டக் அவுட் ஆகினர். இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 13 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. தவ்ஹீத் ஹிரிடோய் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார்.

112 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால் அப்துல் சமத் (30*) மற்றும் ஹசன் நவாஸ் (27*) ஜோடி அதிரடியாக ஆடி 11.3 ஓவர்களிலேயே 112 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது.

இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி எப்போது?

  • தங்கப் பதக்க இறுதிப்போட்டி (இந்தியா vs பாகிஸ்தான்): அக்டோபர் 3, 2026 (சனிக்கிழமை) அன்று ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
  • வெண்கலப் பதக்கப் போட்டி (இலங்கை vs வங்கதேசம்): அதே அக்டோபர் 3 அன்று காலையில் நடைபெற உள்ளது.

45 ரன்களில் ஆல் அவுட்.. செமி பைனலில் இலங்கையை நசுக்கிய இந்தியா.. ஆசிய விளையாட்டு பைனலுக்கு தேர்வு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுவதால், இந்த இறுதிப்போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, October 1, 2026, 13:19 [IST]
Other articles published on Oct 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+