Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது அவுட் தர மாட்டீங்களா? பாபர் அசாமுக்கு அவுட் தராமல் கமுக்கமாக நின்ற அம்பயர்.. கடுப்பான ரோஹித்

அகமதாபாத் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடிக்கும் முன்பே ஒரு முறை எல்பிடபுள்யூ ஆனார்.

ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தார். ரிவ்யூவில் ஸ்டம்ப்பில் பந்து பட்ட போதும், களத்தில் இருக்கும் அம்பயரின் முடிவு எனக் கூறி விடவே, பாபர் அசாம் தப்பினார். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

INDIA vs PAKISTAN Babar Azam : Umpire call gave life to Pakistan captain

அம்பயர் அவுட் தராமல் கமுக்கமாக நின்ற புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவத் துவங்கியது.

2023 உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் னைகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் 20, இமாம் உல் ஹக் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இணைந்து பேட்டிங் செய்து வந்தனர். இந்த உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை. அதனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரன் குவித்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

இந்த நிலையில், அவர் 35 ரன்கள் எடுத்து இருந்த போது குல்தீப் யாதவ் வீசிய பந்தில் எல்பிடபுள்யூ ஆனதாக இந்தியா அவுட் கேட்டது. ஆனால், கள அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார். கேப்டன் ரோஹித் சர்மா உடனே ரிவ்யூவிற்கு சென்றார்.

ரிவ்யூவில் பந்து சரியாக லைனில் பிட்ச் ஆனது. ஸ்டம்ப்பில் படும் இம்பாக்ட்டும் லைனில் இருந்தது. ஆனால், லெக் ஸ்டம்ப்பில் பந்து தகர்த்தது. இப்படி நடந்தால் அது கள அம்பயர் முடிவுக்கே விடப்படும். கள அம்பயர் அவுட் கொடுக்க வேண்டும் என் நினைத்தாலும் கொடுக்கலாம். அல்லது முன்பு எடுத்த முடிவையே திரும்ப அறிவிக்கலாம்.

அதன்படி, கள அம்பயர் அவுட் இல்லை எனக் கூறிய தன் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தார். அதனால், ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது. பின்னர் தட்டுத் தடுமாறி பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆனார்.

பாபர் அசாம் அவுட் ஆன உடன் பாகிஸ்தான் பேட்டிங் சரியத் துவங்கியது. 155 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இருந்த பாகிஸ்தான் அணி, 191 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

Story first published: Saturday, October 14, 2023, 18:55 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+