Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரம எதிரிகளின் மோதல்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எப்படி பார்ப்பது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

அமீரகம்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரலையில் காண ரசிகர்களிடையே ஏகபோகத்திற்கு ஆர்வம் எழுந்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்ப்பதற்காக பல்வேறு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த இரு அணிகளும் மோதும் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள ஷேக் சையது மைதானத்தில் தொடங்கவுள்ளது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது. எனினும் இந்தாண்டும் இரு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு நீடித்து வருகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியினர் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறும் வார்த்தைகள் தான். அதாவது பாகிஸ்தான் முன்பை விட தற்போது பலமாக உள்ளது. எனவே இந்த முறை இந்தியாவை வீழ்த்திவிடும் எனக்கூறி வருகின்றனர்.

கேப்டனின் ஓவர் நம்பிக்கை

கேப்டனின் ஓவர் நம்பிக்கை

இதே போல இன்று பாகிஸ்தான் கேப்டனும் மிகவும் ஓவர் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். கடந்த காலங்களை விட்டுத்தள்ளுங்கள். அதனையெல்லாம் நான் மனதில் வைத்துக்கொள்ளவே மாட்டேன். தற்போது நடப்பதை மட்டுமே பேச வேண்டும். இந்த முறை வெற்றி பெற வேண்டும் என சிறப்பான ஃபார்மில் இருக்கிறோம். எனவே வரலாறு மாற்றி அமைக்கப்படும் என ஓவர் கான்ஃபிடன்ஸாக பேசியுள்ளார். இதனால் இந்த போட்டியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

நேரலை எப்படி பார்ப்பது

நேரலை எப்படி பார்ப்பது

ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் கீழ் இயங்கும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலை ஒளிபரப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழில் காண விரும்பும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் போட்டியை நேரலையில் காணலாம்.

பயணங்களில் இருப்பவர்கள்

பயணங்களில் இருப்பவர்கள்

இல்லங்களில் இல்லாமல் வெளியில் சென்றிருப்பவர்கள் தங்களது மொபைல் மற்றும் லேப்டாப்புகள் மூலம் போட்டியை நேரலையாக பார்க்கலாம். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் செயலி மற்றும் வலைதளத்தின் மூலம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்கலாம். ஸ்கோர் குறித்த உடனடி தகவல்களை பெற மைக்கேல் வலைதளத்தில் காணலாம்.

Story first published: Sunday, October 24, 2021, 12:20 [IST]
Other articles published on Oct 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+