உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது போட்டியல்ல... அது ஒரு போர்.. ஜெயித்தே ஆக வேண்டும்
கோவா: உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டியல்ல, போர்... அதை வெல்ல வேண்டும் என்று முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
கிரிக்கெட் திருவிழாவின் முக்கிய அம்சமான உலக கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி துவங்கி ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது. அந்த தொடரில் ஜூன் 16ம் தேதி இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந் நிலையில், கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய முன்னாள் துவக்க வீரர் சேவாக், பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அது போராக தான் பார்க்கப்படும். எதிர்வரும் உலக கோப்பை தொடரில் ஜூன் 16ம் தேதி இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

புறக்கணிக்க வேண்டும்
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனவே, இந்தியா போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் எழுந்தன. இந்தியாவின் இன்னொரு துவக்க வீரரான கம்பீர், இந்தியா போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

2 முக்கிய விஷயங்கள்
அப்போது, இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சேவக், 2 முக்கிய விஷயங்களை இந்த தருணத்தில் கவனிக்க வேண்டும். ஒன்று... நாம் பாகிஸ்தானுடன் போர் செய்யப்போகிறோமா, இல்லையா என்பது.

ஜெயிக்க வேண்டும்
மற்றொன்று... நாட்டின் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோமா என்பதுதான். ஒருவேளை நாம் ஆடினால் கட்டாயம் வெல்ல வேண்டும் என்று கூறினார்.

நாக் அவுட் போட்டிகள்
உலக கோப்பை 2019 தொடர் வரும் மே 30ம் தேதி துவங்கி ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக 9 போட்டிகளில் ஆட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications