Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs பாகிஸ்தான் டி20: தோற்ற பிறகு டிவியை உடைக்காதீங்க.. பாக். ரசிகர்களை கிண்டல் செய்த EX வீரர்

டி20 உலககோப்பை 2026 தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான மதன் லால் பாகிஸ்தான் ரசிகர்கள் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், ரசிகர்கள் தங்கள் சொந்த வீரர்களை வசைபாடுவதாகவும், தொலைக்காட்சிகளை உடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகவே பார்ப்பதால், இத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை என்று மதன் லால் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் மோதல் இறுதிப் போட்டியை விட முக்கியமானது அல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "உலககோப்பையில் எப்போதுமே மிக முக்கியமானது இறுதிப் போட்டிதான், இந்தியா, பாகிஸ்தான் போட்டி அல்ல. அதிக பார்வையாளர்கள் இருந்தும், 1947 முதல் பாகிஸ்தானுடனான நமது உறவு காரணமாக இதனை பதற்றமாக மாற்றிவிட்டது. நம் நாட்டில் இது ஒரு விளையாட்டு. நாங்கள் வீரர்களை வசைபாடுவதில்லை, தொலைக்காட்சிகளை உடைப்பதில்லை."

பாகிஸ்தானின் இந்த புறக்கணிப்பு மிரட்டல் குறித்து கேட்டபோது மதன் லால் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "விளையாட விரும்பவில்லை என்றால் விளையாடாதீர்கள். முழுப் போட்டியையும் விளையாடாதீர்கள். இது அவர்களின் கிரிக்கெட்டை பாதிக்கும். வருவாய் சரிவைத் தவிர இது நம்மைக் காயப்படுத்தாது. இது பாகிஸ்தானுக்கு நிதி ரீதியாக மட்டுமே தீங்கு விளைவிக்கும். ஐசிசி தடை விதித்தால், அவர்களால் வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாது. பிரதமர் இதில் ஈடுபடுவது நல்லதல்ல.

மொஹ்சின் நக்வி ஆசியக் கோப்பை கோப்பையை அவர் எப்படி வைத்திருந்தார் என்பதை நாம் பார்த்தோம். ஆசியக் கோப்பையிலும் இந்த டி20 உலகக் கோப்பையிலும் அவர்கள் நிறைய சண்டையிட்டனர். நீங்கள் இந்தியாவை அவமானப்படுத்த முயன்றீர்களா?" என்று கேட்டார்.டி20 உலகக் கோப்பைகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற நேரடிப் போட்டிகளின் ரிகார்டின்படி, இந்திய அணி பாகிஸ்தானை 7-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து வலுவான ரெக்கார்டை வைத்துள்ளது.

Story first published: Sunday, February 15, 2026, 8:15 [IST]
Other articles published on Feb 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+