Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று இந்தியா vs பாகிஸ்தான் பலப்பரீட்சை.. மெல்பேர்ன் வானிலை குறித்து புதிய அப்டேட்.. ஒரே ஒரு சிக்கல்

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்பேர்ன் மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக இரு அணிகளும் கடைசி கட்ட பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. எனவே இது பழிதீர்க்கும் போட்டியாக இது இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுவும் இந்த முறை இந்தியா பும்ரா இல்லாமலும், பாகிஸ்தான் அணி அசுரத்தனமான பவுலிங் யூனிட்டுடனும் களமிறங்கவுள்ளனர்.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

உலகக்கோப்பையில் மிக முக்கிய போட்டியான இதில், மழை பாதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், போட்டி நடைபெறும் மெல்பேர்ன் நகரத்தில் இன்று 95% மழைபாதிப்பு இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தனர். இதனால் போட்டி முழுவதுமாக ரத்தாவதற்கு வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

புதிய அப்டேட்

புதிய அப்டேட்

இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. மெல்பேர்னில் மழைக்கான வாய்ப்பு 95 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக மாறியுள்ளது. இன்று காலை கூட மெல்பேர்னில் நல்ல வெயில் இருந்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் மாலை நேரத்தில் சிறிது நேரம் வேண்டுமானால் மழை குறுக்கிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி பார்க்கலாம்?

எப்படி பார்க்கலாம்?

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன. இந்தியாவில் உள்ள ரசிகர்கள் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் தூர் தர்ஷன் சேனல்களில் நேரலையாக காணலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் ஹாட்ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, October 23, 2022, 9:54 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+