Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் நடப்பது சந்தேகம்! தகுதி விதிமுறைகள் வெளியீடு

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கான தகுதி விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 நாடுகள் மட்டுமே பங்கேற்க தகுதி பெற முடியும். 15 வீரர்கள் கொண்ட அணிகள் டி20 வடிவில் மோதவுள்ளன. தகுதிப் பாதையில் மொத்தம் 3 வழிகள் உள்ளன.

India vs Pakistan match not at 2028 Olympic Uncertain as ICC Releases Qualification Criteria

முதல் வழி: ஒலிம்பிக் தொடரை நடத்தும் அமெரிக்காவுக்கு ஒரு இடம் வழங்கப்படும். ஆனால், 2026 ஜூன் 30 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் அவர்கள் ஐசிசி தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் ஒரு முறையாவது வந்திருக்க வேண்டும்.

இரண்டாவது வழி: ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய 4 கண்டங்களில் இருந்து தலா 1 சிறந்த அணிக்கு நேரடி தகுதி வழங்கப்படும். 2026 டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு இந்த இடம் கிடைக்கும். ஆசியாவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதால், நேரடியாகத் தகுதி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விதிமுறையின்படி, ஆசியாவில் இருந்து இந்தியா நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு நேரடித் தகுதி கிடைக்காது. இதனால் பாகிஸ்தான் அணி மூன்றாவது வழியான 'ஒலிம்பிக் தகுதிச் சுற்று 2027' தொடரில் விளையாட வேண்டும். இதில் நேரடித் தகுதி பெறாத உலகின் முன்னணி 8 அணிகள் பங்கேற்கும்.

இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஒரே ஒரு அணிக்கு மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கான 6-வது மற்றும் கடைசி இடம் வழங்கப்படும். நியூசிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் போட்டியிட்டு பாகிஸ்தான் இந்தத் தகுதிச் சுற்றில் வென்றால் மட்டுமே ஒலிம்பிக்கிற்குள் நுழைய முடியும். ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெறத் தவறினால், ஒலிம்பிக்கில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் நடக்க வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

வைபவ் சூர்யவன்ஷிக்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக காரணமே இந்த சீனியர் வீரர்தான்.. உதவி கோச் விளக்கம்

வைபவ் சூர்யவன்ஷிக்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக காரணமே இந்த சீனியர் வீரர்தான்.. உதவி கோச் விளக்கம்

மகளிர் பிரிவில் ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துவிட்டன. ஒலிம்பிக் தொடரில் தகுதி பெறும் 6 அணிகளும் தலா 3 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதவுள்ளன.

Story first published: Monday, June 29, 2026, 19:46 [IST]
Other articles published on Jun 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+