Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெல்பேர்ன் மைதானத்தில் உள்ள கண்டம்.. என்ன செய்தால் இந்திய அணி வெற்றி பெறும்? பிட்ச் ரிப்போர்ட் இதோ!

மெல்பேர்ன்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எத்தனை ரன்கள் வரும், பிட்ச்கள் வரும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்பேர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இரு அணிகளுக்குமே இது முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் தொடரை தொடங்க வேண்டும் என முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

இதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா கடந்தாண்டு தோல்வியை சந்தித்தது. எனவே அதனை தொடர்ந்து செய்வதற்கு பாகிஸ்தான் அணியும், பழிதீர்ப்பதற்காக இந்திய அணியும் களமிறங்குவதால் போட்டியின் மீது ஏக போகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங் ஸ்கோர் எப்படி இருக்கும், யாருக்கு சாதகம் என்பதை தீர்மானிக்கும் பிட்ச் ரிப்போர்ட்டை பார்க்கலாம்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

போட்டி நடைபெறும் மெல்பேர்ன் மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக அமையும். குறிப்பாக தற்போது பிட்ச்-ல் ஓரளவிற்கு புற்களும் இருப்பதால் பந்தில் அதிவேகமாக ஸ்விங்கை எதிர்பார்க்கலாம். எனவே ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆட வேண்டும். அதன்பின்னர் அதிரடி காட்டலாம். பேட்ஸ்மேன்கள் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினாலும் மைதானம் பெரிது என்பதால் பெரிய ஸ்கோர் போட்டியாக இது இருக்காது.

பெரிய ஸ்கோர் போட்டியா?

பெரிய ஸ்கோர் போட்டியா?

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 140 - 150 ரன்கள் வரை மட்டுமே அடிக்கின்றன. 2வதாக விளையாடும் அணி 130 ரன்கள் வரை சராசரியாக அடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் 184 / 4 ரன்கள் ஆகும். அதுவும் இந்திய அணி தான் அடித்திருந்தது குறிப்பிடதக்கது.

வெற்றி சதவீதம்

வெற்றி சதவீதம்

மெல்பேர்ன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 4 டி20 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் முடிவும் எட்டப்படவில்லை. பாகிஸ்தான் அணி இதுவரை இங்கு ஒரே ஒரு போட்டியில் விளையாடி, அதிலும் தோல்வியை தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 23, 2022, 13:20 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+