Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி.. கையை விரித்த மத்திய அரசு.. முழு விவரம்

டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விக்கு தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே மாதம் இது நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்தது. இதனால் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக எந்தவித விளையாட்டுப் போட்டிகளும் இந்தியா பங்கிற்காது என்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

India vs Pakistan match

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ மத்திய அரசு சொல்வதை தான் தாங்கள் கேட்போம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தான் கிரிக்கெட்டை தொடர்ந்து ஹாக்கி, ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானில் இந்தியாவுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த தருணத்தில் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு விளையாட்டு துறைக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளது. அதன்படி இனி பாகிஸ்தானுக்கு எதிராக எந்த ஒரு இருதரப்பு தொடரும், எந்த ஒரு விளையாட்டிலும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய வீரர்களும் நமது நாட்டிற்கு பாகிஸ்தான் வீரர்களும் வர அனுமதி அளிக்கப்படாது என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும் இது இருதரப்பு தொடருக்கு மட்டும் தான் என்றும் சர்வதேச தொடர் தற்போது இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுவதால் அந்த தொடருக்கு மரியாதை அளிக்கும் விதமாக பாகிஸ்தான் நாட்டினருக்கு இந்தியாவில் வந்து விளையாட அனுமதி அளிக்கப்படும்.

இதே போன்று சர்வதேச தொடரில் இரு நாடுகளும் விளையாடுவதற்கு மத்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும் அறிவித்துள்ளது.மேலும் விசா நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை தீர்த்து எளிமையான முறையை சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் அணி மோதுவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

Story first published: Thursday, August 21, 2025, 20:22 [IST]
Other articles published on Aug 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+