Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் 162-க்கு ஆல் அவுட்.. இந்தியாவுக்கு எளிய இலக்கு.. பாதி கிணறு தாண்டியாச்சு

Recommended Video

இந்தியாவுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அருமையாக ஆதிக்கம் செலுத்தினர்.

ஆசிய கோப்பைக்கு முன், இந்தியா இங்கிலாந்து தொடரில் மோசமாக செயல்பட்டதோடு, நேற்று ஆசிய கோப்பையில் கத்துக்குட்டி ஹாங்காங் அணிக்கு எதிராகவும் போராடி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில், சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வலுவாக, நிலையாக ஆடி வருவதால் இந்தியா என்ன செய்யப் போகிறதோ? என இந்திய ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

இந்தியாவுக்கு துவக்கமே அசத்தல்

இந்தியாவுக்கு துவக்கமே அசத்தல்

இந்த நிலையில் பாகிஸ்தான் இன்று டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார் புவனேஸ்வர் குமார். வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். மீண்டும் புவி வீசிய 5வது ஓவரில் பாக்கர் சமான் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 3 ரன்களுக்கு 2 துவக்க வீரர்களையும் இழந்து தவித்தது.

கேட்சை விட்ட தோனி

கேட்சை விட்ட தோனி

அடுத்து ஷோயப் மாலிக், பாபர் ஆசாம் இணைந்து கூட்டணி அமைத்து ரன் குவித்தனர். மாலிக் 26 ரன்கள் இருந்த போது தோனி ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டார். அது கொஞ்சம் கடினமான கேட்ச் என்றாலும் தோனி போன்ற அனுபவ கீப்பர் அதை பிடித்திருக்கலாம்.

மிடில் ஆர்டரை வீழ்த்திய ஜாதவ்

மிடில் ஆர்டரை வீழ்த்திய ஜாதவ்

அடுத்து 21.2 ஓவர்களில் குல்தீப் யாதவ் பந்தில் பாபர் 47 ரன்களில் வெளியேற, அடுத்து கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது 6 ரன்களில் ஜாதவ் பந்திலும், ஷோயப் மாலிக் 43 ரன்களில் ராயுடுவின் அட்டகாசமான ரன் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். ஜாதவ் தொடர்ந்து ஆசிப் அலி 9 ரன்கள், ஷதாப் கான் 8 ரன்களில் வெளியேற்ற பாகிஸ்தானின் மொத்த மிடில் ஆர்டரும் முடிவுக்கு வந்தது. ஜாதவ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூன்று பேரை வீழ்த்தி இந்தியா ஆதிக்கம் செலுத்த காரணமாக இருந்தார்.

பாக். 162 ரன்கள்

பாக். 162 ரன்கள்

அடுத்து பும்ரா தன் முதல் விக்கெட்டாக பாஹீம் அஷ்ரபை 21 ரன்களில் வீழ்த்தினார். அடுத்து ஹசன் அலி 1, உஸ்மான் கான் 0 எளிதில் வெளியற பாகிஸ்தானின் இன்னிங்க்ஸ் 43.1 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில், புவனேஸ்வர் 3, பும்ரா 2, குல்தீப் 1, கேதார் ஜாதவ் 3 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு 163 ரன்கள் என்பது எளிய இலக்கு என்றாலும், பாகிஸ்தான் பந்துவீச்சில் இந்தியா கவனமாக ஆட வேண்டியது அவசியம். இந்தியா இப்போதைக்கு பாதி கிணறு மட்டுமே நல்லபடியாக தாண்டியுள்ளது.

Story first published: Wednesday, September 19, 2018, 20:32 [IST]
Other articles published on Sep 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+