Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: பாகிஸ்தான் வீரர் அநாகரீக கொண்டாட்டம்.. இந்திய ரசிகர்கள் கொதிப்பு.. பேட்டை வைத்து சர்ச்சை

துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய நிலையில், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான்-இன் அரைசதக் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது அரைசதத்தை எட்டியதும், பேட்டை ஒரு ஏகே-47 துப்பாக்கியைப் போல பாவித்து சுடுவது போல சைகை செய்தது, இந்திய ரசிகர்களிடையே கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 171 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் இன்னிங்ஸின் 10-வது ஓவரை அக்சர் படேல் வீசினார்.

அந்த ஓவரில் சிக்ஸர் விளாசிய ஃபர்ஹான், தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால், அதனைத் தொடர்ந்து அவர் கொண்டாடிய விதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது பேட்டை ஒரு ஏகே-47 ரக துப்பாக்கியைப் போல பிடித்துக்கொண்டு, சுடுவது போல அவர் அநாகரீகமாகச் சைகை செய்தார்.

India vs Pakistan Sahibzada Farhan fifty celebration creates stir in Asia Cup 2025

இந்த விசித்திரமான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான கொண்டாட்டம், இந்திய ரசிகர்களைக் கொந்தளிக்கச் செய்தது. சமூக வலைதளமான 'X' (முன்னர் டுவிட்டர்) பக்கத்தில் ஃபர்ஹான்-இன் செயலுக்கு எதிராக ரசிகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஃபர்ஹான்-இன் இந்தச் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு விளையாட்டுப் போட்டியில் இது போன்ற வன்முறைச் சைகைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டிகளை இனி 'ரைவல்ரி' (பகைமை) என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், இரு அணிகளுக்கு இடையேயான தரம் குறைந்துவிட்டதா என்று கேட்டதற்கு, "சார், ரைவல்ரியும் தரமும் ஒன்றுதான். 15 போட்டிகளில் 8-7 என முடிவுகள் இருந்தால் அது ரைவல்ரி. ஆனால் இங்கு 13-1 (12-3) என்பது போன்ற நிலையில் இது ஒரு போட்டியே அல்ல," என்று கிண்டலாகப் பதிலளித்துவிட்டு புன்னகையுடன் சென்றார்.

இந்த போட்டியில், அபிஷேக் ஷர்மா-வின் 74 ரன்கள் மற்றும் சுப்மன் கில்-இன் 47 ரன்கள் ஆட்டத்தால் இந்திய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தனது அடுத்த சூப்பர் ஃபோர் போட்டியில் வரும் புதன்கிழமை அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Story first published: Monday, September 22, 2025, 11:05 [IST]
Other articles published on Sep 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+