அடடே.. இங்க பாருங்க.. மான்செஸ்டர் மைதானத்திற்கு யாரு போயிருக்கான்னு!
Recommended Video
மான்செஸ்டர்: இந்தியா பாகிஸ்தான் நடுவேயான இன்றைய லீக் ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மற்றொரு பக்கம், நமது சினிமா ஸ்டார்கள், அனிருத் மற்றும், சிவகார்த்திகேயன் இருவரும், போட்டி நடைபெறும், மான்செஸ்டர், ஓல்டு டிராப்போர்டு மைதானத்தில் இருந்து இந்திய அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
தீவிர கிரிக்கெட் ரசிகரான அனிருத், உலக கோப்பையில், இந்தியா மோதும் போட்டிகளை ஸ்டேடியத்திற்கே நேரில் சென்று, கண்டுகளித்து வருகிறார். இன்று முக்கியமான போட்டி என்பதால் நண்பர், சிவகார்த்திகேயனுடன் ஸ்டேடியத்தில், உற்சாக கோஷம் எழுப்பி வருகிறார்.

வெற்றி நமதே, வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் அனுபவம் என்றெல்லாம் கேப்ஷனுடன் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
ஓல்டு டிராப்போர்டு மைதானம், மொத்தம், 26000 ரசிகர்கள் மட்டுமே அமர்ந்து பார்க்க கூடிய ஸ்டேடியமாகும். ஆனால் பல லட்சம் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்குமா என முந்தியடித்தனர். ஒரு டிக்கெட் விலையே ரூ.60,000 என்ற அளவுக்கெல்லாம் விற்பனையானது. இருப்பினும், அனிருத்தும், சிவகார்த்திகேயனும் எப்படியோ டிக்கெட்டை பெற்று அசத்தலாக களமிறங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications