Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படிங்க இது? 30 வருஷமா அண்டர்டேக்கருக்கும் இந்திய அணிக்கும் தான் போட்டியே

அகமதாபாத் : WWE மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் - இந்திய கிரிக்கெட் அணி இடையே ஆன ஒரு பந்தயம் பற்றி தற்போது எனக்கு நினைவுக்கு வந்தது.

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டி நடக்க உள்ளது. இந்திய அணி, பாகிஸ்தான் அணியை ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ந்து ஏழு முறை வீழ்த்தி உள்ளது. இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை.

இந்த நிலையில் தான், அண்டர்டேக்கர் - இந்திய அணி இடையே ஆன தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து வெற்றி பெறும் "ஸ்ட்ரீக்" (Streak) என்ற ஒப்பீடு எனக்கு தோன்றியது.

india-vs-pakistan-streak-undertaker-streak-icc-odi-cricket-world-cup-2023

WWE எனும் தொழில்முறை மல்யுத்த நடத்தும் புகழ் பெற்ற "மண்டே நைட் ரா" மற்றும் "ஸ்மாக் டவுன்" போன்ற நிகழ்ச்சிகளிலும், வருடா வருடம் நடத்தும் "ரெஸ்ஸில் மேனியா" நிகழ்ச்சியிலும் மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் மிகவும் பிரபலம்.

அந்த ரெஸ்ஸில் மேனியா நிகழ்வில் 1991 முதல் 2013 வரை தொடர்ந்து 21 ஆண்டுகள் தான் ஆடிய போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இருந்தார் அண்டர்டேக்கர். அவர் தற்போது ஓய்வு பெற்று விட்டாலும் அவரது ஸ்ட்ரீக் சாதனை இப்போதும் ரெஸ்லிங் ரசிகர்களால் பேசப்படும் ஒன்று.

கிட்டத்தட்ட அண்டர்டேக்கர் தன் ஸ்ட்ரீக்கை ஆரம்பித்த அடுத்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான தன் உலகக்கோப்பை ஸ்ட்ரீக்கை தொடங்கியது. 1992 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது.

அப்போதிருந்து 2019 உலகக்கோப்பை வரை இந்தியா ஏழு முறை ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியே சந்திக்கவில்லை. 2007 உலகக்கோப்பையின் போது மட்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மறுபுறம் அண்டர்டேக்கர் வருடா வருடம் நடக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பை போன்ற ரெஸ்ஸில்மேனியா தொடரில் 1992 முதல் 2013 வரை தோல்வியே சந்திக்காமல் வெற்றி பெற்று வந்தார். 2013இல் சிஎம் பங்க்கிற்கு எதிராக பெற்ற வெற்றியே இந்த ஸ்ட்ரீக்கில் அவரின் கடைசி வெற்றி. 2014ஆம் ஆண்டு பிராக் லெஸ்னர், அண்டர்டேக்கரை வீழ்த்தி இந்த ஸ்ட்ரீக்கை முடிவுக்கு கொண்டு வந்தார்.

ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாகிஸ்தான் அணியை சந்திக்கும் இந்தியா தன் ஸ்ட்ரீக்கை இதுவரை தக்க வைத்துக் கொண்டு வந்துள்ளது. அண்டர்டேக்கர் போல அல்லாமல், 2௦23 உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று இந்த சாதனையை தொடர வேண்டும்.

Story first published: Saturday, October 14, 2023, 10:23 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+