
புதிய சாதனை
இந்த போட்டி ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருந்தாலும், இமாலய சாதனையை படைத்துள்ளது. அதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி தான் இதுவரை பார்க்கப்பட்ட சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலேயே மிக அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்த போட்டி என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வளவு பார்வையாளர்கள்
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை உலகெங்கும் சுமார் 16.70 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இ்ந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டி தான் ரசிகர்களால் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது இந்தப் போட்டியை 13.60கோடி ரசிகர்கள் பார்த்தனர். இந்நிலையில் இதனை முறியடித்துள்ளது இந்தியா, பாகிஸ்தான் போட்டி.

போட்டி முடிவு
கடந்த அக்டோபர் 24ம் தேதியன்று இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொண்டது. இரு அணிகளும் கடந்த 2019ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் மீண்டும் சந்திப்பதால், இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்ற, உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களாகலும் இந்த போட்டி கவனம் பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆறுதல் வெற்றிகள்
இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றியை பதிவு செய்தது. எனினும் இந்தியாவால் அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற முடியவில்லை. கடைசி மூன்று ஆறுதல் வெற்றிகளுடன் வீரர்கள் தாய் நாட்டிற்கு திரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











