For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கவலை வேண்டாம்.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு தரமான பிட்ச்.. வேலையை காட்டும் ஐசிசி

நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமான இந்தியா பாகிஸ்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நியூயார்க் புறநகரில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் மிகவும் அபாயகரமாக இருப்பதாகவும் பேட்டிங் செய்ய கடினமாக இருப்பதாகவும் கிரிக்கெட் வீரர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

t20 world cup ind vs pak hardik pandya virat kohli indian national cricket team cricket 20 2024

மேலும் ஸ்கோர் மிகவும் குறைவாக அடிக்கப்படுவதால் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு நடைபெறும் ஆடுகளத்தை மாற்றும் முயற்சியில் ஐசிசி ஈடுபட்டு வருகிறது. நியூயார்க் அடுக்களத்தில் பிட்ச் ஒன்,பிட்ச் 2, பிட்ச் 3, பிட்ச் 4 என நான்கு ஆடுகளம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதில் பிட்ச் ஒன்றில் இலங்கை அணி 77 ரன்களில் ஆட்டம் இழந்தது. பீட்ச் 4-ல் அயர்லாந்து அணி 96 ரன்களில் ஆட்டமிழந்தது. பிட்ச் 2மற்றும் பிட்ச் 3 ஆகியவற்றை ஐசிசி பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் வீரர்களின் பாதுகாப்பு பொருட்டும் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை உறுதிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் ஆடுகளத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக icc விளக்கம் அளித்துள்ளது.

தாங்கள் எதிர்பார்த்தபடி ஆடுகளம் செயல்படவில்லை என்றும் இதனால் என்ன செய்து பிட்சின் தன்மையை மாற்றி நல்ல போட்டியை நடத்த என்ன செய்ய முடியுமோ, அதனை தாங்கள் செய்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக ஆடுகளத்தில் இருக்கும் புற்கள் அனைத்தும் வெட்டப்படுகிறது.

இதன் மூலம் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுவதை தடுக்க முடியும்.
இதேபோன்று பந்தின் பவுன்சும் கொஞ்சம் குறையும். இன்னும் நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் 6 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த ஆறு போட்டிகளுக்கும் நல்ல முடிவை எட்டும் படம் வகையில் ஆடுகளம் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

Story first published: Saturday, June 8, 2024, 18:41 [IST]
Other articles published on Jun 8, 2024
English summary
India vs Pakistan T20 world cup 2024 - ICC Changing New york Pitch கவலை வேண்டாம்.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு தரமான பிட்ச்.. வேலையை காட்டும் ஐசிசி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+