Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் தோத்துட்டாங்க, அழும் பாக். ரசிகர்கள்: ட்விட்டரில் கல கல

டெல்லி: உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததை கிண்டல் செய்து தான் பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை டோணி தலைமையிலான இந்திய அணி தோற்கடித்தது.

இது குறித்து இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பாக். ரசிகர்கள்

பாக். ரசிகர்கள்

பாகிஸ்தான் ரசிகர்கள் தற்போது இப்படி தான் உள்ளனர் என்று கூறி நடிகை கங்கனா ரனாவத் அழும் புகைப்படத்தை ராஹீல் குர்ஷித் என்பவர் வெளியிட்டுள்ளார்.

கோஹ்லி

கோஹ்லி

அப்ரிதி-கோஹ்லி தருணம் என்று ட்வீட் செய்துள்ள ஒருவர் பிரபல இந்தி படமான ஹம் ஆப் கே ஹைன் கௌன் படத்தில் வரும் ஒரு காட்சியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மாதுரிக்கு பதில் கோஹ்லியும், சல்மானுக்கு பதில் அப்ரிதியும் உள்ளனர்.

வோலினி

வோலினி

என்னுடைய பாகிஸ்தானிய ட்விட்டர் ஃபாலோயர்களுக்காக என்று கூறி வோலினி வலி நிவாரணியின் புகைப்படத்தை டீசீ என்பவர் வெளியிட்டுள்ளார்.

மோடி

மோடி

நீங்கள் இருந்து போட்டியை பாருங்கள், நான் கிளம்புகிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோடியிடம் கூற அவர் நிமிர்ந்துகூட பார்க்காமல் கூல் என்று கூறுகிறார் என ரிஷி அய்யங்கார் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

திருமணம்

திருமணம்

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம் என்று கூறி திருமண மஹாலில் டிவியில் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பியதை ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

Story first published: Monday, February 16, 2015, 12:12 [IST]
Other articles published on Feb 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+