Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் எப்போது?.. துபாயில் அண்டர் 19 போட்டி.. எங்கு பார்ப்பது?

துபாய்: கிரிக்கெட் உலகின் பரம எதிரி அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேருக்கு நேர் மோதவுள்ளன. 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஆசியக் கோப்பைத் தொடரில் குரூப்-ஏ பிரிவில் நடைபெறும் இந்த ஆட்டம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய ஜூனியர் அணியும், ஃபர்ஹான் யூசுப் தலைமையிலான பாகிஸ்தான் ஜூனியர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

India vs Pakistan U19 Asia Cup Complete Match Details Where to Watch Live

இரு அணிகளும் செம ஃபார்ம்!

இந்தப் போட்டி ஒரு அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) 234 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் பாகிஸ்தான் அணி மலேசியாவை 297 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிரட்டியுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், இந்தப் போட்டி "யார் சிறந்த அணி?" என்பதை நிரூபிக்கும் களமாக அமையும்.

போட்டி விவரங்கள் மற்றும் பார்ப்பது எப்படி?

போட்டி: இந்தியா U19 vs பாகிஸ்தான் U19 (ஆசியக் கோப்பை)
தேதி: டிசம்பர் 14, 2025 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: ஐசிசி அகாடமி மைதானம், துபாய்.
டாஸ் நேரம்: காலை 10:00 மணி (இந்திய நேரப்படி).
போட்டி தொடங்கும் நேரம்: காலை 10:30 மணி (இந்திய நேரப்படி).

நேரலை விவரம்:

தொலைக்காட்சி: இந்தப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports Network) சேனல்களில் நேரலையாகக் காணலாம்.

ஆன்லைன்: மொபைல் மற்றும் லேப்டாப்பில் பார்க்க விரும்புபவர்கள் சோனி லிவ் (SonyLiv) செயலி மற்றும் இணையதளத்தில் போட்டியை ரசிக்கலாம்.

அணிகள் விவரம்:

இந்திய அணி (U19):

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிகியான் குண்டு (விக்கெட் கீப்பர்), கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், தீபேஷ் தேவேந்திரன், கிஷன் குமார் சிங், ஹெனில் படேல், ஹர்வன்ஷ் பங்காலியா, நமன் புஷ்பக், உத்தவ் மோகன், யுவராஜ் கோஹில்.

பாகிஸ்தான் அணி (U19):

உஸ்மான் கான், சமீர் மின்ஹாஸ், அலி ஹாசன் பலோச், அகமது ஹுசைன், ஃபர்ஹான் யூசுப் (கேப்டன்), ஹம்ஸா ஜஹூர் (விக்கெட் கீப்பர்), ஹுசைஃபா அஹ்சன், நிகாப் ஷஃபிக், தானியல் அலி கான், முகமது சையாம், அலி ரசா, அப்துல் சுபான், முகமது ஹுசைஃபா, மோமின் கமர், முகமது ஷயான்.

Story first published: Sunday, December 14, 2025, 0:05 [IST]
Other articles published on Dec 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+