For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK U19 இறுதிப் போட்டி எப்போது? வைபவ் சூர்யவன்ஷி பாகிஸ்தானை துவம்சம் செய்வதை எங்கு பார்ப்பது?

துபாய்: 2025 ஆசிய கோப்பை அண்டர்-19 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. துபாயில் உள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் நடைபெறும் இந்த மெகா மோதலில், ஏற்கனவே குரூப் சுற்றில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்த இந்திய ஜூனியர் அணி, அதே ஆக்ரோஷத்துடன் கோப்பையை வெல்லக் காத்திருக்கிறது.

ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணி இந்த தொடர் முழுவதும் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் அணியும் இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. இந்த இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி மீது தான் அதிக கவனம் உள்ளது. அவர் பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்வாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.

India vs Pakistan Under-19 Asia Cup 2025 Final Live Streaming and Match Details Vaibhav Suryavanshi on focus

வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக (UAE) அணிக்கு எதிராக 95 பந்துகளில் 171 ரன்கள் விளாசி இருந்தார். இந்த இளம் புயல், பாகிஸ்தான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என எதிர்பார்க்கலாம். மற்றொரு வீரரான அபிகியான் மலேசியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 209 ரன்கள் குவித்து, யூத் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஆரோன் ஜார்ஜ் மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் இதுவரை சிறப்பாக ஆடி உள்ளனர்.

பந்துவீச்சில் மிரட்டல்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் தேவேந்திரன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளராக இருக்கிறார். குரூப் சுற்றில் பாகிஸ்தானின் டாப் ஆர்டரை சரித்தது இவரது வேகம் தான். இன்றும் அதே சாதனையை நிகழ்த்தக் காத்திருக்கிறார்.

பாகிஸ்தான் நிலைமை என்ன?

பாகிஸ்தான் அணி அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. சமீர் மின்ஹாஸ் மற்றும் பந்துவீச்சாளர் அப்துல் சுபான் ஆகியோர் அந்த அணியின் முக்கிய நம்பிக்கையாக உள்ளனர். ஆனால், குரூப் சுற்றில் இந்தியாவிடம் வாங்கிய அடியை அவர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

நேரலை விவரங்கள் (Live Streaming Details):

இந்தியா U19 vs பாகிஸ்தான் U19 இறுதிப்போட்டியை எப்போது, எங்கு பார்ப்பது?

போட்டி: ஆசிய கோப்பை U19 இறுதிப்போட்டி (Final)
தேதி: டிசம்பர் 21, 2025 (ஞாயிற்றுக்கிழமை - இன்று)
நேரம்: இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு (டாஸ் காலை 10:00 மணிக்கு).
இடம்: ஐசிசி அகாடமி மைதானம், துபாய்.

இந்தியா - பாகிஸ்தான் அண்டர் 19 இறுதிப் போட்டியை டிவியில் பார்ப்பது எப்படி?

இந்தியாவில் இந்தப் போட்டியை Sony Sports Network (சோனி ஸ்போர்ட்ஸ்) சேனல்களில் நேரலையாகக் காணலாம்.

மொபைலில் பார்ப்பது எப்படி?

மொபைல் மற்றும் ஆன்லைனில் பார்க்க விரும்புபவர்கள் SonyLIV (சோனி லிவ்) செயலி மற்றும் இணையதளத்தில் போட்டியை நேரலையாகக் கண்டு ரசிக்கலாம்.

Story first published: Sunday, December 21, 2025, 8:06 [IST]
Other articles published on Dec 21, 2025
English summary
India vs Pakistan Under-19 Asia Cup 2025 Final: Live Streaming and Match Details; Vaibhav Suryavanshi on focus
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+