என் கணவர் கோலியை பார்த்தே ஆகணும்.. இக்கட்டான நேரத்தில் கிளம்பி வந்த அனுஷ்கா சர்மா - IND vs PAK
அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை போட்டியில் தன் கணவர் விராட் கோலி ஆடுவதை பார்க்க அகமதாபாத் வந்து இருக்கிறார் அனுஷ்கா சர்மா.
சில நாட்கள் முன்பு, அவர் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக சில தகவல்கள் வெளியானது,
உலகக்கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டியின் போது கூட அவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி விராட் கோலி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவரைக் காண சென்றார்.

இந்த நிலையில், அதிக ரிஸ்க் எடுத்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கூட உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு போட்டியின் போது வர இருக்கிறார். தற்போது அகமதாபாத் நகரத்துக்கு அவர் வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்த போது கூட அவரின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அவரை யாரும் தொட்டு விடாத படி பார்த்து அழைத்துச் சென்றனர். இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும், தன் கணவருக்கு ஆதரவாக மைதானத்துக்கு வந்திருப்பது கோலி - அனுஷ்கா சர்மா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பொதுவாகவே அனுஷ்கா சர்மா, இந்தியாவில் விராட் கோலி ஆடும் அனைத்து போட்டிகளையும் நேரில் வந்து காண்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே முதல் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளையும் நேரில் வந்து கண்டு களித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை போட்டியில் பல பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள 1,34,000 இருக்கைகளும் ஹவுஸ்புல் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது.

இந்திய அணி ஆடிய கடந்த இரண்டு போட்டிகளிலும் பல இருக்கைகள் காலியாக இருந்தன. அந்த நிலை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இருக்காது என்றே கூறுகிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் மோத இருப்பது இது எட்டாவது முறை ஆகும்.


Click it and Unblock the Notifications