Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் பைனல் ரத்து ஆனால் தங்கம் யாருக்கு? ஆசிய விளையாட்டு விதிகளில் மாற்றம்

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தங்கப் பதக்கத்தை கைப்பற்ற இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெறும் ஜப்பானின் நிஷின் நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், போட்டி மழையால் ரத்தானால் தங்கப் பதக்கம் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்த புதிய விதிமுறை வெளியாகி உள்ளது.

வானிலை நிலவரம் எப்படி?

இந்தப் போட்டி அக்டோபர் 3 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அன்று காலை நேரத்தில் நிஷின் நகரில் மழை பெய்வதற்கு 62 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. போட்டி நடைபெற உள்ள மதிய வேளையில் மழையின் தாக்கம் 25 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், மேகமூட்டம் 37 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

India vs Pakistan - Who will Win Gold Medal if Rain washes away the match at Asian Games 2026 Cricket Rules

மழையால் போட்டி கைவிடப்பட்டால் தங்கம் யாருக்கு?

கடந்த 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா ஆப்கானிஸ்தான் இறுதிப் போட்டி மழையால் ரத்தான போது, சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததால் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் நடப்பு 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் அந்த விதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டால், தரவரிசை பார்க்கப்படாது. மாறாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் தங்கப் பதக்கம் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இரு அணிகளுமே ஆசிய சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள்.

அரையிறுதி ஆதிக்கம்

இலங்கைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இஷான் கிஷனின் அதிரடி 80 ரன்கள் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா, அக்‌சர் படேல், அபிஷேக் சர்மாவின் அபாரமான பந்துவீச்சால் இலங்கையை வெறும் 45 ரன்களுக்கு சுருட்டி, 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

மறுபுறம் மழையால் 13 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 112 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

IND vs PAK:

IND vs PAK:

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில், இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டு இரு அணிகளும் ஒரே மேடையில் ஏறி தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படுமா அல்லது ஆட்டம் முழுமையாக நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Story first published: Saturday, October 3, 2026, 6:15 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+