இந்தியா - பாகிஸ்தான் போட்டி நிச்சயம் நடக்கும்.. பெரிய விருந்தாக அமையும்.. சொல்லும் முன்னாள் வீரர்!
லண்டன் : புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடைபெறாது என்ற பேச்சுக்கள் எழுந்தன.
இந்த கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. மேலும், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்துள்ள போர் பதற்றம் உலகக்கோப்பையில் இந்த போட்டி நடைபெற வாய்ப்பே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்டபடி நடைபெறும்
ஆனால், உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் மைக்கேல் வான் இந்தியா - பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என கருத்து கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு
2019 உலகக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 16 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மான்செஸ்டரின் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

அதிகம் பார்க்கப்பட்ட போட்டி
இது பற்றி பேசிய மைக்கேல் வான், "2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி, அந்த ஆண்டின் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டு நிகழ்வாக இருந்தது. அது தான் இந்த போட்டியின் பரிணாமம்" என்றார்.

நிச்சயம் நடக்கும்
மேலும், 2019 உலகக்கோப்பை போட்டி குறித்து பேசிய அவர், "அந்த போட்டி நடைபெறும் என நம்புகிறேன். நிச்சயம் அது நடக்கும். விளையாட்டு தனித்து அதன் போக்கில் விடப்பட வேண்டும். அந்த போட்டி பெரிய விருந்தாக அமையும். மான்செஸ்டர் அதை எதிர்பார்த்து காத்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications