Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்தில் குதித்த ஸ்டெயின்.. பும்ராவை கேலி செய்து டிவிட்.. யார் மேல் தவறு இருக்கு?

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் வீரர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.

கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷப் பண்ட் என இந்திய வீரர்கள் மீது தென்னாப்பிரிக்க வீரர்கள் வம்பிழுக்க, அதற்கு இந்திய அணி வீரர்களும் தக்க பதிலடி தந்தனர். ஏனென்றால் இது விராட் கோலி படை அல்லவா.

இந்த நிலையில், பும்ராவை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டேயின், அறிவுரை என்ற பெயரில் வம்பிழுத்துள்ளார்.

வல்லவன் பும்ரா

வல்லவன் பும்ரா

ரசிகர்களால் பும்..பும்..பும்ரா என்று அன்புடன் அழைக்கப்படவபவர் ஜஸ்பிரிட் பும்ரா. தனது அசுர வேகப்பந்துவீச்சால் பல பேட்ஸ்மேன்களுக்கு தூங்கா இரவுகளை பரிசாக அளித்துள்ளார். ஆசியாவிற்கு வெளியே மட்டும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர் பும்ரா. களத்தில் யாராவது வம்பிழுத்தால் அவருக்கு தக்க பதிலடி தருவதில் பும்ரா வல்லவர்,

ஆண்டர்சன் கதை

ஆண்டர்சன் கதை

மேலும் தனது பந்துவீச்சு மூலமே பும்ரா ஸ்லேஜ் செய்துள்ளார்.இது இந்திய அணிக்கே நண்மையாகவே விளங்கியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் கூட பும்ரா வீசிய பவுண்சர்களால் நிலைக்குலைந்து போன ஆண்டர்சன், கோபத்தில் செயல்பட்டு , பந்துவீச்சில் கோட்டைவிட்டார். அதன் விளைவாக இந்திய அணி வெற்றி பெற்றது.

ஸ்டேயின் டிவிட்

ஸ்டேயின் டிவிட்

தற்போது இதே போன்று ஜோகனஸ்பர்க் டெஸ்டிலும் பும்ராவை தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ ஜென்சன் வம்பிழுத்தார். அவருக்கு பும்ரா அப்போதே வாயால் பதிலடி தந்தார்,இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டேயின், இதே போன்ற பவுண்சரை தான் இங்கிலாந்து தொடரில் பும்ரா ஆண்டர்சனுக்கு வீசினார். பவுண்டர்களை எப்படி எதிர்கொள்வது என்று கத்துக்கோ பொடியா என்று குறிப்பிட்டுள்ளார்.

பும்ரா முக்கியம்

பும்ரா முக்கியம்

பும்ராவை வெறுப்பேற்றும் விதமாக தொடர்ந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் நடந்து கொண்ட நிலையில், ஸ்டேயினும் தற்போது அறிவுரை கூறுவது போல் வம்பிழுத்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட்டுகள் தேவைப்படும் நிலையில் பும்ராவின் பங்கு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 6, 2022, 19:22 [IST]
Other articles published on Jan 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+